சுதந்திர போராட்ட வீரர்களாக அவதாரம் எடுத்த நடிகர்!
குடியரசு தினத்தை முன்னிட்டு 12 சுதந்திர போராட்ட வீரர்களாக அவதாரம் எடுத்திருக்கும் நடிகரின் புதுமையான முயற்சி
இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 'கருங்காலி' மற்றும் 'நான் சிகப்பு மனிதன்' புகழ் நடிகர் சேத்தன் சீனு, 12 விடுதலை வீரர்களின் வேடங்களில் பிரமாண்ட போட்டோஷூட் செய்துள்ளார்.
சுதந்திரத்திற்காக பாடுபட்ட நாயகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குடியரசு தினமான ஜனவரி 26 அன்று காலை 10.05 மணி முதல் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்படும். ஜனவரி 23 முதல் முன்னோட்டம் வெளியிடப்படும்.
இந்த முயற்சியைப் பற்றி பேசிய சேத்தன் சீனு, சில ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரியிடம் இந்த யோசனையை பற்றி கூறியதாக தெரிவித்தார்.
"இந்த முயற்சி ஒரு திரைப்படத்திற்காக தொடங்கப்பட்டது. சில சுதந்திர போராட்ட வீரர்களை திரையில் பிரதிபலிக்க நான் விரும்ப...
