குணமடைவோர் எண்ணிக்கை உயர்வதால் கொரானாவுக்கு விரைவில் குட்பை சொல்லுமா தமிழகம்!
இந்தியாவிலேயே வைரஸ் தொற்றில் மீண்டவர்கள் அதிகம் தமிழகத்தில் தான்!
உலகம் முழுதும் பெரும் பீதியை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரானா வைரஸ் தாக்கம்
இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பாதிப்பை கட்டுப்படுத்த முடிகிறது.
இப்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 24 ஆயிரத்து 942 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் நாடு முழுதும் இதுவரை 779 பேர் உயிரிழந்துள்ளனர்.
இருந்த போதும் மருத்துவத் துறையினரின் தன்னலமற்ற சேவை, நோயாளரின் மன உறுதி காரணமாக கொடூர வைரஸ் பாதிப்பில் இருந்து தினமும் பலர் குணமடைந்து வருகின்றனர்.
நாடு முழுவதும் கொரானா பரவியவர்களில் 5 ஆயிரத்து 210 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்
வை...
