சனிக்கிழமை, மே 2
Shadow

குணமடைவோர் எண்ணிக்கை உயர்வதால் கொரானாவுக்கு விரைவில் குட்பை சொல்லுமா தமிழகம்!

 

இந்தியாவிலேயே வைரஸ் தொற்றில் மீண்டவர்கள் அதிகம் தமிழகத்தில் தான்!

உலகம் முழுதும் பெரும் பீதியை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரானா வைரஸ் தாக்கம்

இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பாதிப்பை கட்டுப்படுத்த முடிகிறது.

இப்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 24 ஆயிரத்து 942 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் நாடு முழுதும் இதுவரை 779 பேர் உயிரிழந்துள்ளனர்.

இருந்த போதும் மருத்துவத் துறையினரின் தன்னலமற்ற சேவை, நோயாளரின் மன உறுதி காரணமாக கொடூர வைரஸ் பாதிப்பில் இருந்து தினமும் பலர் குணமடைந்து வருகின்றனர்.

நாடு முழுவதும் கொரானா பரவியவர்களில் 5 ஆயிரத்து 210 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்

வைரஸ் பாதிப்பில் இந்திய அளவில் 3 இடத்தில் இருந்தாலும் பூரண குணமடைந்தவர் எண்ணிக்கையிலும், சதவிகிதத்திலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாடு மிகச் சிறப்பான இடத்தில் உள்ளது. பாதிக்கப்பட்ட நோயாளர்களில் பாதிக்கு பாதி பூரண குணமடைந்து வீடு திரும்பி விட்டார்கள்.

நாடு முழுவதும் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்த 5 ஆயிரத்து 210 பேரில் தமிழ்நாட்டில் மட்டும் 960 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமி்ழ்நாட்டில் கொரானா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை – 1,865 பேர்

அதில் கொரானா உறுதி செய்யப்பட்டவர்கள் – 1,821 பேர்.

இப்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் – 825 பேர்

வைரசில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் – 960 பேர்

கொரானா பாதிப்பில் உயிரிழந்தவர்கள் – 23 பேர்.

நாடு முழுதும் பார்க்கும் போது தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையில் நோயாளர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுதும் தமிழ் மொழிக்கும், தமிழ் மருத்துவத்துக்கும் எப்போதும் தனி அடையாளம் உண்டு. இந்த கொடூர கொரானா உயிர்க்கொல்லி வைரஸ் நோயை ஒழிப்பதிலும் தமிழகம்தான் மிகப்பெரிய சாதனை படைக்கும் நாள் விரைவில் வரும் என்று நம்புவோம்.

910 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன