பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்ஷய்குமார்
பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்ஷய்குமார்
கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவிகளை மக்கள் வழங்கலாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், கொரோனா வைரஸ் பாதிப்புக்காக பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியது : கொடூர கொரானா தாக்குதலில் இருந்து மக்களை காக்க வேண்டியது அவசியம். அதற்காக என் சேமிப்பில் இருந்து 25 கோடியை அளித்திருக்கிறேன் என்றார்.
ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதிக்கு பிரபாஸ் 3 கோடி நிதி கொடுத்து இருக்கிறார்....

