செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19
Shadow

Tag: நீட் தேர்வு

நீட் தேர்வு விலக்கு மசோதா- கவர்னருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

நீட் தேர்வு விலக்கு மசோதா- கவர்னருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

Assembly news, HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
நீட் தேர்வு விலக்கு மசோதா- கவர்னருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு! நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு பெறும் புதிய சட்ட மசோதாவை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 13-ந்தேதி சட்டசபையில் தாக்கல் செய்தார். ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினர் தந்த அறிக்கையின் அடிப்படையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது சட்டசபையில் நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து விளக்கி கூறினார். மேலும், அந்த மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று தரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். நீட் தேர்வு விலக்கிற்கு ஆதரவு கோரி ஏற்கனவே 12 மாநில முதல்-மந்திரிகளுக்கு முதல்- அமைச்சர் ம...
1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று ஆலோசனை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று ஆலோசனை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று ஆலோசனை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்! பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- * 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று மாலை ஆலோசனை நடைபெறுகிறது. * கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பள்ளிகள் திறக்கப்படும். * நீட் தேர்வை ரத்து செய்ய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். * அனைவரும் ஒன்று சேர்ந்து நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என்பதே நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார். ...
புதிய ‘நீட்’ வினாத்தாள் வடிவமைப்பு உதவியாக இருந்ததா?: மாணவ-மாணவிகள் கருத்து!

புதிய ‘நீட்’ வினாத்தாள் வடிவமைப்பு உதவியாக இருந்ததா?: மாணவ-மாணவிகள் கருத்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
புதிய ‘நீட்’ வினாத்தாள் வடிவமைப்பு உதவியாக இருந்ததா?: மாணவ-மாணவிகள் கருத்து! மாணவ-மாணவிகளின் பள்ளி பாடத்திட்டத்தின் அடிப்படையில்தான் நீட் தேர்வு நடைபெறுகிறது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் பள்ளிகள் திறக்கப்பட்டு இருந்தாலும், மாணவ-மாணவிகளின் சுமையைக் குறைக்கும் வகையில் அனைத்து கல்வி வாரியங்களிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருந்தன. அதை கருத்தில்கொண்டும், கொரோனா  தொற்றை மனதில் வைத்தும் தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் சிறிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, முன்பு இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடப்பிரிவுகளில் இருந்து தலா 45 வினாக்கள் கேட்கப்பட்டு, ஒவ்வொரு வினாவுக்கும் 4 மதிப்பெண் அடிப்படையில் மொத்தம் 720 (180x4) மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மேற்சொன்ன 4 பாடப்பிரிவுகளில் தலா 50 வினாக்கள் கேட்கப்பட்டு, ஒவ்வொரு பாடப்பிரிவுகள...
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் திடீர் தற்கொலை!

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் திடீர் தற்கொலை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் திடீர் தற்கொலை! எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வை நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு இடையில் இன்று சந்திக்கின்றனர்.  தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 40 ஆயிரத்து 376 மாணவர்கள், 70 ஆயிரத்து 594 மாணவிகள், ஒரு திருநங்கை (தஞ்சையில்) என மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 971 பேர் தேர்வு எழுத உள்ளனர்.  பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த  ‘நீட்’ தேர்வு மாலை 5 மணியுடன் நிறைவுபெறுகிறது. இந்த நிலையில்,  ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவக்குமார் என்பவரின் மகன் தனுஷ் (20). ஏற்கனவே 2 முறை  நீட் தேர்வு எழுதிய நிலையில் இன்று 3-வத...
பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை!

பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை! தமிழகத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கொரோனா தொற்று குறையாததால் 1-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. கொரோனா முதல் அலை இந்த ஆண்டு தொடக்கத்தில் குறைந்தது. இதனால் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு அறிவித்தது. விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்த சில தினங்களில் கொரோனா 2-வது அலை தாக்க தொடங்கியது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டன. இதன் காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடம் கற்று வருகிறார்கள். தமிழகத்தில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 1 கோடி பேர் ஆகும். பிளஸ்-2 வகுப்பில் மட்டும் சும...
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுக துணை நிற்கும் -சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதி!

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுக துணை நிற்கும் -சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுக துணை நிற்கும் -சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதி! தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வு விவகாரம் எதிரொலித்தது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக திமுக, அதிமுக இடையே  விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுக்கு திமுக ஒருபோதும் துணை நிற்காது, தேர்வில் இருந்து நிச்சயம் விலக்கு பெறுவோம் என்றார். ‘அதிமுக ஆட்சியில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட தீர்மானம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. டெல்லியில் பிரதமரை சந்தித்தபோது நீட் விவகாரம் குறித்து வலியுறுத்தினேன். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுகவும் துணை நிற்கவேண்டும்’ என கேட்டுக்கொண்டார். இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்...
நீட் தற்கொலைகள் மனசாட்சியை உலுக்குகிறது – சூர்யா அறிக்கை

நீட் தற்கொலைகள் மனசாட்சியை உலுக்குகிறது – சூர்யா அறிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதை போல அவலம் எதுவும் இல்லை எனவும் வேதனை தெரிவித்தார். அவரது அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது… நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது.   ...
கடும் கட்டுப்பாடுகளுடன் நாளை நீட் தேர்வு!

கடும் கட்டுப்பாடுகளுடன் நாளை நீட் தேர்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  நீட் தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடு நாடு முழுவதும் 3 ஆயிரத்து 842 மையங்களில் சுமார் 16 லட்சம் பேர் எழுதும் ‘நீட்’ தேர்வு நாளை நடக்கிறது. கொரோனாவையொட்டி தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன தேர்வர்கள் கையில் 50 மில்லி அளவுகொண்ட கிருமிநாசினி திரவம், வெளிப்படையான வாட்டர் பாட்டில், கையுறைகள், தேர்வுக்கு தேவையான ஆவணங்கள் எடுத்துச்செல்லலாம். தேர்வு அறையில் தேசிய தேர்வு முகமை சார்பில் முககவசம் வழங்கப்படும். அந்த முககவசத்தை தான் தேர்வர்கள் அணிந்து தேர்வு அறைக்குள் செல்லவேண்டும். அதேபோல், தேர்வு முடிந்ததும், ஹால் டிக்கெட்டில் கேட்டு இருக்கும் விவரங்களை சரியாக பூர்த்திசெய்து, தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். மாணவர்கள் தேர்வு மைய வளாகத்தில் தேர்வர்கள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்பது முதன்மையான கட்டுப்பாட...
பள்ளிகளில் வாத்தியாரே இல்லாமல் நீட் தேர்ச்சியை பற்றி பேசலாமா – மத்திய மாநில அரசுகளை சாடிய ஜோ..!

பள்ளிகளில் வாத்தியாரே இல்லாமல் நீட் தேர்ச்சியை பற்றி பேசலாமா – மத்திய மாநில அரசுகளை சாடிய ஜோ..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  கிராமப்புற பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை போக்காமல் "நீட்" தேர்ச்சி விகிதம் குறைகிறது எனக்கூறுவது தவறு - மத்திய,மாநில அரசுகளை சாடிய ஜோதிகா ராட்சசி பட பத்திரிகையாளர் சந்திப்பில் ஜோதிகா ரொம்பவே ஆவேசமாக பேசினார். அப்போது அவர் கூறியது: அகரம் பவுண்டேசன் சார்பில் ஆண்டுதோறும் பல கிராமப்புற மாணவர்களை சந்திக்கிறேன். அவர்களில் பலர் சொல்வது எங்கள் பள்ளியில் பல நேரங்களில் ஆசிரியர்களே இருப்பதில்லை. பல பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லாமல் இருக்கிறது என்று, முதலில் அரசு பள்ளிக்கூடங்களில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை சரி செய்யாமல் நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைகிறது என்று சொன்னால் எப்படி. அதோடு இல்லாமல் நான் டிவிட்டரில் சில விஷயங்களை பார்த்தேன். நான் டிவிட்டரில் இல்லை ஆனால் என் கணவர் டிவிட்டர் மூலமாக ராட்சசி படம் பற்றி கருத்துக்களில் பல இது பள்ளிக்கூடம் போல உள்ளது, சாட்டை ப...
நீட் தேர்வு முடிவு நாளை வெளியீடு..!

நீட் தேர்வு முடிவு நாளை வெளியீடு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    நீட் தேர்வு முடிவு நாளை வெளியீடு..! நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) முடிவின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த தேர்வு கடந்த மாதம் (மே) 5-ந்தேதியும், 20-ந்தேதியும் நடைபெற்றது. இந்த நிலையில் நீட் தேர்வு முடிவு நாளை (புதன்கிழமை) வெளியிடப்பட இருக்கிறது. தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தேர்வர்கள் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....