புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: பாஜக மீது வழக்கு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்க  ஆகஸ்ட் 31வரை காலக்கெடு!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்க ஆகஸ்ட் 31வரை காலக்கெடு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாட்டையே உலுக்கிய மிக முக்கியமான சம்பவம் பாபர் மசூதி இடிப்பு. இந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் வெடித்த கலவரத்தால் சுமார் ப்2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த கலவரத்துக்கு பா.ஜ.க மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அப்போதைய உத்தர பிரதேச முதல்வர் கல்யாண்சிங், வினய் கத்தியார், விஹெச்பி தலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர் உள்ளிட்ட 21 பேர் தான் காரணம் என அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த கலவர வழக்கு லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பை இந்த ஆண்டு ஏப்ரல் இறுதிக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக கொண்டு வரப்பட்ட ஊ...