திங்கட்கிழமை, செப்டம்பர் 14
Shadow

Tag: பார்வதி அம்மாள்

ராசாக்கண்ணு மனைவியை நேரில் சந்தித்து ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்!

ராசாக்கண்ணு மனைவியை நேரில் சந்தித்து ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
ராசாக்கண்ணு மனைவியை நேரில் சந்தித்து ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்! த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் காட்டப்பட்ட ராசாக்கண்ணு மீது பொய் வழக்குப் போடப்பட்டு போலீஸ் சித்ரவதையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது. ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தற்போது தான் மிகவும் வறுமையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இதையறிந்த ராகவா லாரன்ஸ், ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு தனது சொந்...