உள்ளாட்சி தேர்தல்- தேசிய கட்சிகளுக்கு தண்ணீர் காட்டும் மாநில கட்சிகள்!
மிக நீண்ட பாரம்பரியம் மிக்க தேசிய கட்சியான காங்கிரசுக்கும், பலம் வாய்ந்த ஆளும் கட்சியாக இருக்கும் பா.ஜனதாவுக்கும் தமிழகத்தில் மாநில கட்சிகளான தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தேர்தல் நேரங்களில் தண்ணீர் காட்டி வருகின்றன.
இதனால் காங்கிரசும், பா.ஜனதாவும் விழிபிதுங்கி தவிக்கின்றன.
பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் அப்படி என்றால் இப்போது உள்ளாட்சி தேர்தலிலும் படாதபாடு படுகின்றன.
2011-ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் காங்கிரசுக்கு தி.மு.க. 14 இடங்களை கொடுத்தது.
அப்போது மொத்த வார்டுகள் 155 தான். இப்போது வார்டு எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது.
ஆனால் காங்கிரசுக்கு ‘அந்த 14’ மட்டும்தான். வேண்டுமானால் மண்டலத்துக்கு ஒன்று வீதம் 15 இடங்கள் தரலாம் என்று கூறுவதாக கூறப்படுகிறது.
ஆனால் காங்கிரஸ் தரப்பில் சட்டமன்ற தொகுதிக்கு 2 வீதம் 21 சட்டமன்றத்துக்கும் 42 தொகுத...



