ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 26
Shadow

Tag: பினராயி விஜயன்

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கம்யூனிச சித்தாந்தத்துக்கு எதிரானவர்- பினராயி விஜயன் பரபரப்பு பேச்சு!

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கம்யூனிச சித்தாந்தத்துக்கு எதிரானவர்- பினராயி விஜயன் பரபரப்பு பேச்சு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நீடித்து வருகிறது. கேரள சட்டசபையில் சமீபத்தில் மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாநில முதல்-மந்திரியே செயல்பட வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த சட்டதிருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்க போவதில்லை என கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார். மேலும் அவர் அரசின் பல்வேறு நடவடிக்கைகளை விமர்சித்து பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:- கவர்னர் தான் மாநில மந்திரிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். எனவே கவர்னரின் அதிகாரத்தை மாநில அரசால் குறைக்க முடியாது. கடந்த 2019-ம் ஆண்டு கண்ணூர் பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு சென்ற என் மீது தாக்குதல் முயற்சி நடந்தது. அப்போது போலீசார் அவர்களின் கடமையை...
கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி – பினராயி விஜயன்

கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி – பினராயி விஜயன்

HOME SLIDER, NEWS, politics
கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாகவே தடுப்பூசி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார் மாநிலத்தில் புதிதாக 22,414 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 22 பேர் நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 5,431 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தடுப்பூசிகளை வாங்கி கொள்ளுமாறு மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், கொரோனாவால் மாநிலங்கள் ஏற்கெனவே நிதிச் சுமையில் உள்ளன. மாநிலங்களை மேலும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளிவிடாமல் மத்திய அரசே மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கேரள அரசு இலவசமாகவே தடுப்பூசியை வழங்கும் என்றார். முன்னதாக கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க கோரி பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது...