ஆதரவற்றோர் இல்லத்துக்கு 1 மாதத்துக்கு தேவையான உணவு பொருட்களை வழங்கிய போலீஸ் தம்பதி!
ஆதரவற்றோர் இல்லத்துக்கு 1 மாதத்துக்கு தேவையான உணவு பொருட்களை வழங்கிய போலீஸ் தம்பதி!
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் மற்றும் ஆதரவற்றோர் உணவுக்கே கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களுக்காக பல்வேறு தரப்பினரும் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். பல இடங்களில் தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த போலீஸ் தம்பதி தங்களது ஒரு மாத சம்பளத்தில் ஆதரவற்றோர் இல்லத்துக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
https://www.youtube.com/watch?v=VeXk-fRr0tM
திண்டுக்கல் அருகே உள்ள கல்லடிப்பட்டியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர் அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்திலும், இவரது மனைவி செல்வரத்தினம் விளா...
