ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

ஆதரவற்றோர் இல்லத்துக்கு 1 மாதத்துக்கு தேவையான உணவு பொருட்களை வழங்கிய போலீஸ் தம்பதி!

ஆதரவற்றோர் இல்லத்துக்கு 1 மாதத்துக்கு தேவையான உணவு பொருட்களை வழங்கிய போலீஸ் தம்பதி!

தமிழகத்தில் கொரோனா 2ம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் மற்றும் ஆதரவற்றோர் உணவுக்கே கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களுக்காக பல்வேறு தரப்பினரும் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். பல இடங்களில் தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த போலீஸ் தம்பதி தங்களது ஒரு மாத சம்பளத்தில் ஆதரவற்றோர் இல்லத்துக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

திண்டுக்கல் அருகே உள்ள கல்லடிப்பட்டியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர் அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்திலும், இவரது மனைவி செல்வரத்தினம் விளாம்பட்டி போலீஸ் நிலையத்திலும் ஏட்டாக பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வாழ்வாதாரம் இழந்துள்ள நபர்களுக்கும் தங்களால் ஆன உதவிகளை செய்ய முடிவு செய்தனர். அதன்படி பள்ளப்பட்டியில் செயல்பட்டு வரும் மன வளர்ச்சி குன்றியோர் காப்பகம் மற்றும் ஆதரவற்றோர் 150 பேர் தங்கியுள்ள காப்பகத்துக்கு 10 மூட்டை அரிசி, பருப்பு, சர்க்கரை, காய்கறிகள், வாழைப்பழம், முக கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வழங்கினர்.

போலீஸ் தம்பதியின் இந்த செயலுக்கு மாவட்ட எஸ்.பி. உள்பட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரிதும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள எஸ்.வாடிப்பட்டியைச் சேர்ந்த டிரைவர் கண்ணன் மகள் சண்முகவள்ளி. இவர் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது சேமிப்பாக வைத்திருந்த 1444 ரூபாயை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார். அவருக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.

139 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன