வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: ஊரடங்கு

மருத்துவ குழுவினருடன் நாளை மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

மருத்துவ குழுவினருடன் நாளை மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
மருத்துவ குழுவினருடன் நாளை மு.க.ஸ்டாலின் ஆலோசனை! தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நோய் தொற்று கட்டுப்படுவதை பொறுத்து அவ்வப்போது அரசு தளர்வுகளையும் அறிவித்து வருகிறது. கடந்த மாதம் 28-ந்தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி நோய் தொற்று சதவீதத்தின் அடிப்படையில் 3 வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. முதல் வகையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. 2-வது வகையில் அரியலூர், கடலூர், தர்மபுரி உள்பட 23 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. 3-வது வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் உள்ளன. இதில் 3-வது வகையில் இடம்பெற்றுள்ள 4 மாவட்டங்களுக்கும் கூடுதலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன...
ஊரடங்கு நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊரடங்கு நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை! தமிழகத்தில் கடந்த மே 7-ந்தேதி புதிய அரசு பதவி ஏற்றபோது கொரோனா தொற்று பரவல் ஏறுமுகமாக இருந்தது. ஒருகட்டத்தில் தினசரி தொற்று எண்ணிக்கை 36 ஆயிரத்தை தொட்டது. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டார். அதன்படி மே 24-ந்தேதியில் இருந்து 31-ந்தேதிவரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இந்த காலகட்டத்தில் தொற்று சற்று குறைந்து முன்னேற்றம் காணப்பட்டது. எனவே தொற்றின் சங்கிலித்தொடரை அறுப்பதற்காக மீண்டும் ஒரு வாரம், அதாவது மே 31-ந்தேதியில் இருந்து ஜூன் 7-ந்தேதிவரை முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டது. இந்த 2 முழு ஊரடங்கில் நல்ல பலன் கிடைத்ததைத் தொடர்ந்து 3-ம் முறையாக சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு உத்தரவு 7-ந்தேதியில் இருந்து 14-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் க...
ஊரடங்கு நீட்டிப்பா?- முதலமைச்சர் நாளை ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பா?- முதலமைச்சர் நாளை ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊரடங்கு நீட்டிப்பா?- முதலமைச்சர் நாளை ஆலோசனை! தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பின் கொரோனா பரவலை தடுக்க கடந்த மாதம் முதல் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 21-ந்தேதி வரை அமலில் உள்ளது. தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஊரடங்கு நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து நாளை காலை 11 மணியளவில் மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்....
கொரோனா கட்டுப்பாடுகளை மீறாதீர்கள்- மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

கொரோனா கட்டுப்பாடுகளை மீறாதீர்கள்- மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா கட்டுப்பாடுகளை மீறாதீர்கள்- மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை! தமிழகத்தில் கொரோனா தொற்றை குறைப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோவில் பேசி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசி இருப்பதாவது. தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் வணக்கம். உங்கள் நலன் காக்கும் இந்த அரசு தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா என்ற பெருந்தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் அதிகபட்சமாக ஒருநாளைக்கு தொற்றால் பாதிக்கப்படுகிற வர்கள் 36 ஆயிரமாக இருந்தனர். இது 50ஆயிரமாக உயரும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துகொண்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக விரைவாக குறைந்து கொண்டே வருகிறது. மருத்துவம...
ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு!

ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு!

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு! தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- * கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டீக்கடைகள் நாளை முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் முறையில் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. * பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல, இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவை காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை இயங்கலாம். இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. * பொதுமக்களின் நலன் கருதி அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் நாளை முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது. * கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும்,...
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை!

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை! தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வருகிற 14-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று பரவல் தொடர்ந்து கூடுதலாகவே இருந்ததால் முழு ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டது. ஒருசில தளர்வுகள் மட்டும் அங்கு அறிவிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு  முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உயர் அதிகாரிகளுடன்  ஊரடங்கு  குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லாத ஊரடங்கு  அ...
ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வருமா?- மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை!

ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வருமா?- மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வருமா?- மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை! தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து கொரோனா வைரஸ்  2-வது அலை பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. கடந்த மாதம் 2-வது வாரத்திற்கு மேல் பாதிப்பு உச்சத்தை தொட்டது. 21-ந் தேதி அதிகபட்சமாக தினசரி பாதிப்பு 36 ஆயிரத்து 184ஆக இருந்தது. மேலும் பலி எண்ணிக்கையும் 467ஆக உயர்ந்தது. இதனால் தமிழ்நாட்டில் 24-ந்தேதி முதல் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து பாதிப்பு 30 ஆயிரத்துக்கு மேல் இருந்ததால் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு தொற்று தொடர்ந்து சரிந்து வந்ததால் கடந்த 7-ந்தேதி முதல் சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. க...
ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன- சென்னையில் வாகன சோதனை தீவிரம்!

ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன- சென்னையில் வாகன சோதனை தீவிரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன- சென்னையில் வாகன சோதனை தீவிரம்! தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24-ந்தேதி முதல் 2 வாரங்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவுக்கு வந்துள்ளது. இன்று முதல் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை 6 மணியில் இருந்து அமலுக்கு வந்தது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் நோய் தொற்று அதிகமாக இருப்பதால் இந்த மாவட்டங்களில் மட்டும் குறைந்த அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அங்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த மாவட...
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலானது!

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலானது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலானது! தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடந்த மாதம் 10-ந் தேதி முதல் 7-ந் தேதி (இன்று) காலை 6 மணி வரை அமலில் இருக்கிறது. இந்த நிலையில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது 14-ந் தேதி காலை 6 மணி வரையிலும் நீட்டித்து, முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டுனம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று அதிகமாக உள்ளதால் சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி அறிவிக்கப்பட்டுள்ள தள...
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு! தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு வருகிற 7-ந்தேதி அதிகாலை வரை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14-ந்தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது....