ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: மனுசங்கடா

மனுசங்கடா விமர்சனம்

மனுசங்கடா விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
    ரொம்ப நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் யதார்த்தங்களும், வாழ்வியல் நிஜங்களும் திரைப்படங்களாக வந்து உலக சினிமாவுக்கு தமிழ் சினிமாவும் சளைத்தது இல்லை என குரல் எழுப்ப தொடங்கியிருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் தொடங்கி சமீபத்திய பரியேறும் பெருமாள் படம்வரைக்கும் பல படங்கள் இந்த வாழ்வியல் வலியை ரத்தமும் சதையுமான மனிதர்களின் நிஜத்தை செல்லுலாய்டில் பதித்து கண்முன்பாக நிறுத்தியது. அந்த வரிசையில் இணைந்திருக்கிற படம் மனுசங்கடா.... பிழைப்புக்காக கிராமத்தில் இருந்து சென்னையில் வேலை செய்கிற மகன்... ஒரு நள்ளிரவில் திடீரென அப்பா இறந்து விட்டதாக தகவல் வருகிறது. அவசர அவரசமாக கிராமத்துக்கு வருகிறான் மகன். அங்கே இறந்து கிடக்கும் அப்பாவின் உடலை அடக்கம் செய்ய பொதுப்பாதையை பயன்படுத்தக் கூடாது ஆதீக்க ஜாதியினர் தடுக்கிறார்கள். உடலை அடக்கம் செய்யும் வேலையை நிறுத்திவிட்டு சட்டப்படி போ...