வைரஸ் பரவலை தடுக்க தளர்வுகளை கடுமையாக்க மருத்துவ குழு முதல்வருக்கு பரிந்துரை!
வைரஸ் பரவலை தடுக்க தளர்வுகளை கடுமையாக்க மருத்துவ குழு முதல்வருக்கு பரிந்துரை!
சென்னையில் கொரானா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பின் மருத்துவ நிபுணர்கள் குழு சார்பில் குகானந்தம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரானா பாதிப்பு தொடர்பாக முதலமைச்சரிடம் 5-வது முறையாக ஆலோசனை நடத்தியுள்ளோம். கொரானா பாதிப்பு உச்சம் தொட்டு குறையும் என கூறியிருந்தோம். அதுபோல் நடக்க உள்ளது. தமிழகத்தில் கொரானா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. உச்சத்தை அடைந்துள்ள கொரானா பாதிப்பு மெல்ல குறைய தொடங்கும்.
பரிசோதனைகள் அதிகமாக செய்ய செய்ய பாதிப்பை கண்டறிந்து உயிரிழப்பை தடுக்க முடியும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து கொரானா பரிசோத...
