புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

வைரஸ் பரவலை தடுக்க தளர்வுகளை கடுமையாக்க மருத்துவ குழு முதல்வருக்கு பரிந்துரை!

 

 

வைரஸ் பரவலை தடுக்க தளர்வுகளை கடுமையாக்க மருத்துவ குழு முதல்வருக்கு பரிந்துரை!

சென்னையில் கொரானா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப் பின் மருத்துவ நிபுணர்கள் குழு சார்பில் குகானந்தம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரானா பாதிப்பு தொடர்பாக முதலமைச்சரிடம் 5-வது முறையாக ஆலோசனை நடத்தியுள்ளோம். கொரானா பாதிப்பு உச்சம் தொட்டு குறையும் என கூறியிருந்தோம். அதுபோல் நடக்க உள்ளது. தமிழகத்தில் கொரானா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. உச்சத்தை அடைந்துள்ள கொரானா பாதிப்பு மெல்ல குறைய தொடங்கும்.

பரிசோதனைகள் அதிகமாக செய்ய செய்ய பாதிப்பை கண்டறிந்து உயிரிழப்பை தடுக்க முடியும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து கொரானா பரிசோதனை செய்ய கூறியுள்ளோம். சென்னையில் ஒவ்வொரு வார்டுகளிலும் தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட ஆக்சிஜன் சிலிண்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கொரானா பரவலை கட்டுப்படுத்த ஏற்கனவே நடைமுறையில் உள்ள தளர்வுகளை கடுமையாக்க பரிந்துரை செய்துள்ளோம் என்கிறார்.

ஆக, ஏற்கனவே வதந்தி என கூறப்பட்ட சென்னை முழு முடக்கம் விரைவில் நடக்கும் என தெரிகிறது.

499 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன