சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

Tag: Corona

நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா!

நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
அடுத்த வார தொடக்கத்தில் நடைபெற உள்ள கேன்ஸ் 2022 திரைப்பட திருவிழாவில், ஏஆர் ரஹ்மான், ஆர் மாதவன், நவாசுதீன் சித்திக், நயன்தாரா, தமன்னா, சேகர் கபூர் உள்பட பலருடன் பாலிவுட் நடிகர் அக்சய்குமார் இணைந்து பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அக்சய்குமார் கொரோனா பரிசோதனை செய்திருந்தார். இதன் முடிவில் பாசிட்டிவ் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதை தவிர்க்க உள்ளதாக தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார். நேற்று காலையில், நான் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் எனக்கு தொற்று இருப்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, நான் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். நான் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளேன், என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களைப் பரிசோதித்து பார்த்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்க...
கொரோனா 3-ம் அலை பாதிப்பு ஒரே வாரத்தில் 45 சதவீதம் குறைந்தது!

கொரோனா 3-ம் அலை பாதிப்பு ஒரே வாரத்தில் 45 சதவீதம் குறைந்தது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனாவின் உருமாறிய வடிவமான ஒமைக்ரான் வைரஸ் பரவலால் கடந்த டிசம்பர் இறுதியில் இருந்து இந்தியாவில் தினசரி பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியது. தினசரி பாதிப்பு 6 ஆயிரத்தில் இருந்து நாள்தோறும் படுவேகமாக உயர்ந்தது. முதல் 2 அலைகளை விட 6 மடங்கு வேகத்தில் தினசரி பாதிப்பு அதிகரித்ததால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரம் நாடு முழுவதும் மக்களுக்கு 160 கோடி டோசுக்கும் மேல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்ததால் உயிரிழப்புகள் குறைவாகவே இருந்தது. மேலும் நோயின் தீவிரமும் குறைவாகவே காணப்பட்டதால் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் வீட்டு தனிமையிலேயே குணம் அடைந்தனர். இதனால் 3-ம் அலை குறுகிய காலத்தில் உச்சம் அடைந்தது. கடந்த மாதம் 21-ந்தேதி 3.47 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளானதே இந்த அலையின் உச்சமாக சுகாதாரத்துறையினர் அறிவித்தனர். அதன் பிறகு தினசரி பாதிப்பு நாள்...
சட்டென குறையும் கொரோனா… மீளும் தமிழகம்!

சட்டென குறையும் கொரோனா… மீளும் தமிழகம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
      இந்தியா முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸின் 3வது அலை பாதிப்பு, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. நேற்று 26 ஆயிரத்து 533 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை இன்று சற்று குறைந்து 24,418 ஆக பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த ஒருவாரத்துடன் ஒப்பிடுகையில் பாதிப்பு எண்ணிகை ஏறத்தாழ 5 ஆயிரம் குறைந்துள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 6வது நாளாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. குறிப்பாக, இன்று கொரோனா வைரஸ் பாதித்தவர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதன்படி, இன்று ஒரே நாளில் 27 ஆயிரத்து 885 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 57 ஆயிரத்து 846-ஆக அதி...
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கொரோனா!

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கொரோனா!

Uncategorized
    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு பணிபுரியும் விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்கள் பொங்கல் பண்டிகையையொட்டி அவரவர் சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். விடுமுறை முடிந்து அனைவரும் பணிக்கு திரும்பிய நிலையில் பலருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை அடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நேற்று முன்தினம் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மேலும் 152 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் 250 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து வரக்கூடிய அனைவருக்கும் கட்டாயம் பரிசோதனை மேற்கொண்ட பிறகு ஆராய்ச்சி மையத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். 50 சதவீத பணியாளர்களுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக...
5ஜி சேவையால் கொரோனா பரவுகிறதா? அச்சத்தில் விமான சேவை ரத்து!

5ஜி சேவையால் கொரோனா பரவுகிறதா? அச்சத்தில் விமான சேவை ரத்து!

HOME SLIDER, politics, உலக செய்திகள், செய்திகள்
  5ஜி தொழில்நுட்பம் பயம் காரணமாக அமெரிக்காவுக்கு செல்ல இருந்த ஏர் இந்தியா விமானங்கள் 2-வது நாளாக இன்று ரத்து செய்யப்ப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் பல நாடுகளில் 5ஜி செல்போன் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கெல்லாம் 5ஜி சேவையால் கொரோனா பரவுகிறது என்றும், பறவைகளுக்கு ஆபத்து என்றும் செய்தி பரப்பப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் அதிவேக திறன் கொண்ட 5ஜி செல்போன் தொழில்நுட்பத்தை தொலை தொடர்பு நிறுவனங்கள் நேற்று அறிமுகப்படுத்தின. இதையடுத்து அதிவேக 5ஜி தொழில்நுட்பத்துக்காக நிறுவப்பட்ட செல்போன் கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சால், விமான போக்குவரத்து பாதிக்கப்படும் என்று விமான நிறுவனங்கள் கவலை தெரிவித்தன. விமானம் பறக்கும் உயரத்தை அறிய முடியாமல் விமானிகள் திணறுவார்கள் என்றும், ஓடுபாதைக்கு அருகே செல்போன் கதிர்வீச்சு இருக்கும்போது, விமானம் புறப்படுவதிலும...
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் மு.க. ஸ்டாலின்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் மு.க. ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, செய்திகள்
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி மற்றும் முக கவசம் மட்டுமே தடுப்பு ஆயுதமாக பார்க்கப்பட்டு வருகிறது இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள முன் களப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ஏப்ரல் 14-ம் தேதிக்கு முன்னதாக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட 4 லட்சம் நபர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு, அனைத்து தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார்  ...
“இரண்டு முறை தப்பிய நான் மூன்றாவது முறை மாட்டிக் கொண்டேன்” – வைரஸினால் பாதிக்கப்பட்ட குஷ்பு போட்ட பதிவு

“இரண்டு முறை தப்பிய நான் மூன்றாவது முறை மாட்டிக் கொண்டேன்” – வைரஸினால் பாதிக்கப்பட்ட குஷ்பு போட்ட பதிவு

HOME SLIDER
  “இரண்டு முறை தப்பிய நான் மூன்றாவது முறை மாட்டிக் கொண்டேன், நான் உயிருடன் மீண்டு வர பிரார்த்தியுங்கள்” நடிகை குஷ்பு போட்ட பதிவால் சோகத்தில் ரசிகர்கள். கடந்த சில நாட்களாக இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பலர் பாதிக்கப் பட்டதுடன் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது, இதனால் ஊரடங்கு உத்தரவு ஒரு சில இடங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதுடன் மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப் பட்டு வருகின்றது. கொரோனா வைரஸினால் தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் தொடர்ந்து பாதிக்கப் பட்டு வருகின்றனர். கமலஹாசன், திரிஷா, சத்தியராஜ்,மீனா, என பலர் பாதிக்கப் பட்ட நிலையில் தற்போது நடிகை குஷ்புவும் பாதிக்கப் பட்டுள்ளார். இது குறித்து குஷ்பு வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து என்னையும் என் குடும்பத்தையும் மிகவும் கஷ்டப் பட்டு பாதுகாத்து வந்தேன்...
பொங்கல் பண்டிகை நாட்களில் கோவிலுக்கு செல்ல பொது மக்களுக்கு தடை

பொங்கல் பண்டிகை நாட்களில் கோவிலுக்கு செல்ல பொது மக்களுக்கு தடை

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தமிழக அரசின் புதிய கட்டுப்பாட்டின்படி, 14-01-2022 முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கல் நாளான ஜனவரி 16ம் தேதி (ஞாயிறு) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஜனவரி 31ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் ஒருபகுதியாக  பொங்கல் விடுமுறை நாட்களில்  கோவிலுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு வார நாட்களில் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த கட்டுப்பாடுகள் நிறைவடையும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை ஜனவரி 31ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்த...
இந்தியாவில் கொரோனா பரவல் 3ம் அலை இம்மாத இறுதியில் உச்சத்தை தொடலாமாம்!

இந்தியாவில் கொரோனா பரவல் 3ம் அலை இம்மாத இறுதியில் உச்சத்தை தொடலாமாம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்தியாவில் கொரோனா பரவல் 3ம் அலை இம்மாத இறுதியில் உச்சத்தை தொடலாமாம். இந்தியாவில் கொரோனா பரவல் இம்மாத இறுதியில் உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கு அடுத்த வாரம் பாதிப்பு உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து ஐஐடி கான்பூர் கல்வி நிலைய பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் அளித்த தகவலின்படி அடுத்த மாதத்தில் இருந்து பாதிப்பு குறையத் தொடங்கும் என்று கூறப்படுகிறது டெல்லியில் பரவல் உச்ச நிலையை அடையும்போது நாள் ஒன்றுக்கு பாதிப்பு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை இருக்கும். மும்பையை பொருத்தவரையில் ஒருநாள் பாதிப்பு அதிகபட்சமாக 30 ஆயிரம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிற...
புதிய ‘நீட்’ வினாத்தாள் வடிவமைப்பு உதவியாக இருந்ததா?: மாணவ-மாணவிகள் கருத்து!

புதிய ‘நீட்’ வினாத்தாள் வடிவமைப்பு உதவியாக இருந்ததா?: மாணவ-மாணவிகள் கருத்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
புதிய ‘நீட்’ வினாத்தாள் வடிவமைப்பு உதவியாக இருந்ததா?: மாணவ-மாணவிகள் கருத்து! மாணவ-மாணவிகளின் பள்ளி பாடத்திட்டத்தின் அடிப்படையில்தான் நீட் தேர்வு நடைபெறுகிறது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் பள்ளிகள் திறக்கப்பட்டு இருந்தாலும், மாணவ-மாணவிகளின் சுமையைக் குறைக்கும் வகையில் அனைத்து கல்வி வாரியங்களிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருந்தன. அதை கருத்தில்கொண்டும், கொரோனா  தொற்றை மனதில் வைத்தும் தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் சிறிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, முன்பு இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடப்பிரிவுகளில் இருந்து தலா 45 வினாக்கள் கேட்கப்பட்டு, ஒவ்வொரு வினாவுக்கும் 4 மதிப்பெண் அடிப்படையில் மொத்தம் 720 (180x4) மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மேற்சொன்ன 4 பாடப்பிரிவுகளில் தலா 50 வினாக்கள் கேட்கப்பட்டு, ஒவ்வொரு பாடப்பிரிவுகள...