செவ்வாய்க்கிழமை, மே 21
Shadow

சட்டென குறையும் கொரோனா… மீளும் தமிழகம்!

 

 

 

இந்தியா முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸின் 3வது அலை பாதிப்பு, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.

நேற்று 26 ஆயிரத்து 533 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை இன்று சற்று குறைந்து 24,418 ஆக பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

கடந்த ஒருவாரத்துடன் ஒப்பிடுகையில் பாதிப்பு எண்ணிகை ஏறத்தாழ 5 ஆயிரம் குறைந்துள்ளது.

இதன்மூலம் தொடர்ந்து 6வது நாளாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. குறிப்பாக, இன்று கொரோனா வைரஸ் பாதித்தவர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதன்படி, இன்று ஒரே நாளில் 27 ஆயிரத்து 885 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 57 ஆயிரத்து 846-ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில் இணைநோய்களுடன் கொரோனா வைரஸூக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய இறப்பு எண்ணிக்கையுடன் சேர்த்து இதுவரை கொரோனா தொற்றுக்கு தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிகை 37,506 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளரும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவித்தார். 4 மாவட்டங்களில் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கூறிய அவர், விரைவில் அந்த மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை குறையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

312 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன