ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: corona latest news

சட்டென குறையும் கொரோனா… மீளும் தமிழகம்!

சட்டென குறையும் கொரோனா… மீளும் தமிழகம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
      இந்தியா முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸின் 3வது அலை பாதிப்பு, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. நேற்று 26 ஆயிரத்து 533 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை இன்று சற்று குறைந்து 24,418 ஆக பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த ஒருவாரத்துடன் ஒப்பிடுகையில் பாதிப்பு எண்ணிகை ஏறத்தாழ 5 ஆயிரம் குறைந்துள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 6வது நாளாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. குறிப்பாக, இன்று கொரோனா வைரஸ் பாதித்தவர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதன்படி, இன்று ஒரே நாளில் 27 ஆயிரத்து 885 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 57 ஆயிரத்து 846-ஆக அதி...
“இரண்டு முறை தப்பிய நான் மூன்றாவது முறை மாட்டிக் கொண்டேன்” – வைரஸினால் பாதிக்கப்பட்ட குஷ்பு போட்ட பதிவு

“இரண்டு முறை தப்பிய நான் மூன்றாவது முறை மாட்டிக் கொண்டேன்” – வைரஸினால் பாதிக்கப்பட்ட குஷ்பு போட்ட பதிவு

HOME SLIDER
  “இரண்டு முறை தப்பிய நான் மூன்றாவது முறை மாட்டிக் கொண்டேன், நான் உயிருடன் மீண்டு வர பிரார்த்தியுங்கள்” நடிகை குஷ்பு போட்ட பதிவால் சோகத்தில் ரசிகர்கள். கடந்த சில நாட்களாக இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பலர் பாதிக்கப் பட்டதுடன் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது, இதனால் ஊரடங்கு உத்தரவு ஒரு சில இடங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதுடன் மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப் பட்டு வருகின்றது. கொரோனா வைரஸினால் தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் தொடர்ந்து பாதிக்கப் பட்டு வருகின்றனர். கமலஹாசன், திரிஷா, சத்தியராஜ்,மீனா, என பலர் பாதிக்கப் பட்ட நிலையில் தற்போது நடிகை குஷ்புவும் பாதிக்கப் பட்டுள்ளார். இது குறித்து குஷ்பு வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து என்னையும் என் குடும்பத்தையும் மிகவும் கஷ்டப் பட்டு பாதுகாத்து வந்தேன். ...