“அருவா சண்ட” படத்திற்காக வைரமுத்து வரிகளில் ரம்யாநம்பீசன் பாடிய பாடல் வெளியீடு!
வைரமுத்து எழுத தரண் இசையில் ரம்யா நம்பீசன் பாடிய "அருவா சண்ட" பாடல் வெளியீடு! 'கொரோனா' அச்சத்தை உடைக்கும் தமிழ் திரையுலகம்!!
" அருவா சண்ட " படத்திற்காக வைரமுத்து வரிகளில் ரம்யாநம்பீசன் பாடிய பாடல்
தமிழ் திரையுலகில் முதல் முழுமையான டிஜிட்டல் திரைப்படமான "சிலந்தி", ரணதந்த்ரா (கன்னடம்) படங்களை இயக்கிய ஆதிராஜன் எழுதி இயக்கியிருக்கும் படம் "அருவா சண்ட". கபடி சண்டையையும் காதல் சண்டையையும் கௌரவக் கொலையையும் மையமாக வைத்து உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் ராஜா, மாளவிகா மேனன் நாயகன் நாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் சரண்யா பொன்வண்ணன் ஆடுகளம் நரேன் கஞ்சாகருப்பு இயக்குனர் மாரிமுத்து காதல் சுகுமார் வெங்கடேஷ் சுஜாதா உட்பட பலர் நடித்திருக்கின்றனர். சரண்யா பொன்வண்ணன் இதுவரை ஏற்காத மாறுபட்ட வேடத்தில் மிரட்டியிருக்கிறார். கபடி போட்டிகள் பி...
