27 அமாவாசை வந்தாலும் தேர்தல் வராது. 270 அமாவாசை வந்தாலும் பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக முடியாது – ப.சிதம்பரம் பிரச்சாரம்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ், திமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி செயப்படுத்தப்படும் என்றும், தேர்தல் பிரசார கூட்டத்தில் நின்று கொண்டு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பேசுகின்றனர்.
அவர்கள் தேவையில்லாமல் பிதற்றலாக பேசக் கூடாது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய ப.சிதம்பரம், சட்டமன்றத்தை முடக்குவோம் என்று கூறுகின்றனர். சட்டசபையை யாராலும் முடக்க முடியாது.
அரசியல் சாசனப்படி அது முடியாது. நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக உள்ளது. 2...
