இந்தி தெரியாது என்றதால் கனிமொழி எம்.பி.யிடம் “நீங்கள் இந்தியரா?” என கேட்டு ஏர்ப்போர்ட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய பெண் அதிகாரி!
இந்தி தெரியாது என்றதால் "நீங்கள் இந்தியரா?" என கனிமொழி எம்.பி.யிடம் கேள்வி கேட்டு சர்ச்சையை எழுப்பிய விமான நிலைய பெண் அதிகாரி!
டெல்லி செல்வதற்காக இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த தி.மு.க எம்.பி கனிமொழி இந்தி தெரியாது எனக் கூறியதற்காக “நீங்கள் இந்தியரா?” என அங்கு பணியிலிருந்த சி.ஐ.எஸ்.எஃப் பெண் அதிகாரி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கனிமொழி எம்.பி, இந்த விஷயத்தை பதிவிட்டு, “இன்று விமான நிலையத்தில் ஒரு சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரியிடம், எனக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் பேசமுடியுமா என கேட்டபோது, அவர், “நீங்கள் இந்தியரா?” என்று என்னிடம் கேட்டார்.
இந்தியராக இருப்பது என்பது இந்தி மொழி தெரிந்திருப்பதற்கு சமம் என்கிற நிலை எப்போதிலிருந்து உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
...

