ஓட்டுக்காக பொய் பேசாதீர்கள் – மோடிக்கு சந்திரசேகரராவ் அட்வைஸ்
119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
பா.ஜ.க. தலைவர் அமித் ஷா 4 பிரசார கூட்டங்களில் பேசிச் சென்றுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது கட்டமாக இன்று பிரசார கூட்டங்களில் பேசி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்னர் இங்கு முதல்கட்ட பிரசாரத்துக்கு வந்த பிரதமர் மோடி, நிஜாமாபாத் நகரை லண்டன் நகர...
