சுய லாபத்திற்காக போராட்டங்களை தூண்டிவிடும் அரசியல் கட்சிகள்… ரஜினியின் சர்ச்சை பேச்சு
ரஜினிகாந்த் சமீபத்திய பேச்சுக்கள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. குடியுரிமை விவகாரம் தொடர்பாக பேசும் போது அரசியல் கட்சியினர் சுய ஆல்பத்திற்காக போராட்டங்களை தூண்டி விடுகிறார்கள் என பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சியினரை அவமதித்து தவறான கருத்தை ரஜினி முன்வைக்கிறார் என்ற எண்ணம் எழுந்துள்ளது.
தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம் என ரஜினிகாந்த் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக 25-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ரஜினிகாந்துக்கு அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளதாக நேற்று தகவல் வெளியானது.
இந்நிலையில் இதுதொடர்பாக போயஸ்கார்டனில் உள்ள இல்லத்தில் பேட்டியளித்த ரஜினிகாந்த் கூறியதாவது:-
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம...
