விஜய் குறித்து தனி நீதிபதி அளித்த கருத்துகளை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
தனி நீதிபதி கூறிய கருத்துக்ளை நீக்கக்கோரி நடிகர் விஜய் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில்,
அந்த கருத்துகளை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் விஜய், லண்டனில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோல்ட் காரை வாங்கினார்.
இதற்கு இறக்குமதி வரியாக கிட்டத்தட்ட 2 கோடியை செலுத்தியிருந்தார்.
இருப்பினும், அந்த காரை வட்டார போக்குவரத்து அதிகாரியின் அலுவலகத்தில் பதிவுசெய்யும் போது,
வணிக வரித்துறையில் நுழைவு வரியை செலுத்தி சான்று வாங்கிவருமாறு கூறப்பட்டது.
இந்த வரியை செலுத்தவேண்டிய அவசியமில்லை என கேரள மற்றும்
சென்னை உயர்நீதிமன்ற வழக்குகள் சிலவற்றில் குறிப்பிட்டுள்ளதாக கூறி இந்த வரியை நடிகர் விஜய் செலுத்த மறுத்திருந்தார்.
எனினும், நுழைவு வரியை கட்டாயம் செலுத்தவேண்டும் என வணிகத்துறை உத்தரவிட்டதால் அதை எதிர்த்து வழக்கு தொ...

