வெள்ளிக்கிழமை, மே 1
Shadow

Tag: லாரன்ஸ்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லாரன்ஸ்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லாரன்ஸ்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே 2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக வந்தனர். அதன் பிறகு அவர் படங்கள் இயக்கவில்லை. ஐஸ்வர்யா, கடந்த ஜனவரி மாதம் தனுசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தார். தற்போது, முசாபிர் என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி உள்ளார். இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்சும், ஐஸ்வர்யாவும் திடீரென்று சந்தித்து பேசி உள்ளனர். இருவரும் சந்தித்த புகைப்படங்களை ஐஸ்வர்யா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, அன்பான அண்ணன் லாரன்சை சந்தித்த பிறகு எனது மூளை இன்னும் வேகமாக செயல்படு கிறது என்று கூறியுள்ளார். இதன்மூலம், லாரன்ஸ் நடிக்கும் படத்தை ஐஸ்வர்யா இயக்க இருப்பதாக தகவல்...
கமல் படத்தில் இருந்து விலகியது ஏன்? லாரன்ஸ் விளக்கம்!

கமல் படத்தில் இருந்து விலகியது ஏன்? லாரன்ஸ் விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கமல் படத்தில் இருந்து விலகியது ஏன்? லாரன்ஸ் விளக்கம்! நடிகர் கமலின் 232 வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முதலில் இந்த கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருந்தது. சில காரணங்களால் விக்ரம் படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவில்லை. அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன் படத்தில் பிசியாக நடிப்பதாலும், அதன்பின் சந்திரமுகி 2 படத்தின் வேலைகள் இருப்பதாலும் கமலின் விக்ரம் படத்தில் நடிக்க முடியாமல் போன காரணம் என்று லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்....
லஷ்மிபாம் படத்தை லாரன்ஸ் மாஸ்டரை தவிர வேறு யாராலும் இயக்க முடியாது – கியாரா அத்வானி

லஷ்மிபாம் படத்தை லாரன்ஸ் மாஸ்டரை தவிர வேறு யாராலும் இயக்க முடியாது – கியாரா அத்வானி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  " லட்சுமி பாம் " படத்தை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது -கீயரா அத்வானி தமிழில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற காஞ்சனா படத்தை ஹிந்தியில் 'லட்சுமி பாம்' என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள். இப்படத்தை தமிழில் எழுதி இயக்கி மாபெரும் வெற்றிப் படமாக்கிய ராகவா லாரன்ஸ் தான் ஹிந்தியிலும் இயக்குகிறார். சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஒரு சின்ன மனக்கசப்பில் இந்தப் படத்தை தான் இயக்கவில்லை என்று லாரன்ஸ் அறிவித்தார். அவர் அறிவித்த உடனே படக் குழுவினரும், படத்தின் கதாநாயகன் அக்ஷய் குமாரும் ராகவா லாரன்ஸுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அவர்களின் அன்பை ஏற்ற லாரன்ஸ் மீண்டும் படத்தை இயக்க ஆயத்தமானார். மறுபடியும் இயக்குனர் பொறுப்பை லாரன்ஸ் ஏற்றுக்கொண்டது படக்குழுவை பெருமகிழ்ச்சியில் ஆழ்தியுள்ளது. படத்தின் கதாநாயகி கீயரா அத்வானி இதைப்பற்றி கூறும் போது, "அ...
மனக்கசப்பு நீங்கியது… தேடி வந்த மரியாதையால் மீண்டும் அக்‌ஷய் குமாரின் லஷ்மிபாம் படத்தை இயக்குகிறார் லாரன்ஸ்..!

மனக்கசப்பு நீங்கியது… தேடி வந்த மரியாதையால் மீண்டும் அக்‌ஷய் குமாரின் லஷ்மிபாம் படத்தை இயக்குகிறார் லாரன்ஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மனக்கசப்பு நீங்கியது... தேடி வந்த மரியாதையால் மீண்டும் அக்‌ஷய் குமாரின் லஷ்மிபாம் படத்தை இயக்குகிறார் லாரன்ஸ்..! தமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் ஹிந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்க ஆரம்பித்தார். அக்ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்றது. பின்னர் திடீரென அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. தன் அனுமதி பெறாமல் அந்த போஸ்டரை வெளியிட்டதாகவும்,  சுயமரியாதைதான் முக்கியம் அதனால் ஹிந்தி ரீமேக்கிலிருந்து விலகுகிறேன் என ராகவா லாரன்ஸ் அறிவித்தார். அவரது விலகல் முடிவு இந்தியத் திரையுலகில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பல ரசிகர்கள் மீண்டும் ராகவா லாரன்ஸ்தான் அந்தப் படத்தை இயக்க வேண்ட...
காஞ்சனா 1 மூலம் பாலிவுட் இயக்குனர் ஆகப்போகும் லாரன்ஸ்..!

காஞ்சனா 1 மூலம் பாலிவுட் இயக்குனர் ஆகப்போகும் லாரன்ஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஹிந்திக்கு போகும் ராகவா லாரன்ஸ்காஞ்சனா 1 படத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்.. உலகம் முழுவதும் அமோக வெற்றி பெற்ற காஞ்சனா படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப் பட உள்ளது...ராகவா லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடிக்கிறார்...சரத்குமார் நடித்த வேடத்தில் நடிக்க பிரபலமான நடிகர்கரிடம் பேசப் பட்டுக் கொண்டிருக்கிறது....ராகவா லாரன்ஸ் முதன் முதலாக ஹிந்திப் படத்தை இயக்குவதன் மூலம் பாலிவுட் போகிறார்...மற்ற நட்சத்திரங்கள் பற்றி பின்னர் அறிவிக்கப் பட உள்ளது...ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு  துவங்க உள்ளது.....