கொரானா வைரஸ்” பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணிற்கு வெற்றிகரமான பிரசவம்- அரசுக்கு லாரன்ஸ் நன்றி!
"கொரானா வைரஸ்" பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணிற்கு வெற்றிகரமான பிரசவம்!
நமது அரசாங்கத்திற்கு எனது இதயப்பூர்வமான நன்றிகள்!
நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம்!
நான் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்!
இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்குத் தெரிந்த ஒரு நபர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளார், அவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார்,
அவர் பிரசவம் செய்யும் நிலையில் இருந்தார்,
எனவே அவரது கணவரும், மாமானாரும் என்னை அலைபேசியில் அழைத்து மருத்துவமனைக்கு செல்ல உதவி கேட்டார்கள்,
இத்தகவலை நான்
மாண்புமிகு சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் பி.ஏ.வான ரவி சார் அவர்களுக்கு தெரிவித்தேன்! அவர் அவசரம் கருதி சம்பந்தப்பட்ட நண்பரின் இல்லத்திற்கே நேரில் சென்று, அந்த கர்ப்பிணி பெண்ணை அழைத்துப்போய் கீழ்பாக்கம் கே.எம்.சி மருத்துவமனையில் சேர்த்தார்.
அப...
