திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: லூசிபர்

உருவாகிறது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம்.. வைரலாகும் வீடியோ!

உருவாகிறது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம்.. வைரலாகும் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
லூசிபர், பிரித்விராஜ், prithviraj, luciferமலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'லூசிபர்'. இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கிறார். இந்நிலையில் 'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு 'எம்புரான்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்களை...
சிரஞ்சீவி படத்திற்காக பிரபல இசையமைப்பாளருடன் முதன்முறையாக இணையும் மோகன் ராஜா!

சிரஞ்சீவி படத்திற்காக பிரபல இசையமைப்பாளருடன் முதன்முறையாக இணையும் மோகன் ராஜா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிரஞ்சீவி படத்திற்காக பிரபல இசையமைப்பாளருடன் முதன்முறையாக இணையும் மோகன் ராஜா! மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தியாவையே மிரள‌ வைத்த இந்த படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும், அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்திருந்தார். இப்படத்தை பார்த்த தெலுங்கு நடிகர் ராம்சரண், தன் தந்தை சிரஞ்சீவிக்கு இந்தக் கதை பொருத்தமாக இருக்கும் என கருதி, அதன் தெலுங்கு ரீமேக் உரிமையை கைப்பற்றினார். தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், தனி ஒருவன் போன்ற படங்களை இயக்கி பிரபலமான மோகன்ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில், இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இயக்குனர் மோகன் ராஜாவுடன் அவர் இணைந்து பணியாற்றுவது இதுவே முதன்முறை. தற்போது இப்படத்தின் இசைப் பணிகள் தொடங்கப்பட்டு உள்...
மோகன்லால் நடித்த லூசிபர் படம் ரூ.200 கோடி வசூல்..!

மோகன்லால் நடித்த லூசிபர் படம் ரூ.200 கோடி வசூல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மலையாளத்தில் எப்போதும் நல்ல கதைகளை மக்கள் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். மோகன்லால் நடித்த புலிமுருகன் முதல் தடவையாக ரூ.100 கோடி வசூல் ஈட்டியது. அதன்பிறகு நிவின்பாலி கதாநாயகனாக நடித்த காயங்குளம் கொச்சுண்ணி படமும் ரூ.100 கோடி வசூலை தொட்டது. தற்போது பிருதிவிராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சுவாரியர் நடித்து கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்த ‘லூசிபர்’ படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. தமிழில் லூசிபர் படத்தை தாணு தனது நிறுவனம் சார்பில் ரிலீஸ் செய்திருந்தார். ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம் என்ற பெருமையும் இந்த படத்துக்கு கிடைத்துள்ளது. “இந்த பெரிய மைல்கல்லை எட்டுவதற்கு உதவிய உலக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று டுவிட்டரில் மோகன்லால...