‘வருமுன் காப்போம்’ திட்டம் மீண்டும் தொடக்கம்- மு.க.ஸ்டாலின் வாழப்பாடியில் தொடங்கி வைத்தார்!
‘வருமுன் காப்போம்’ திட்டம் மீண்டும் தொடக்கம்- மு.க.ஸ்டாலின் வாழப்பாடியில் தொடங்கி வைத்தார்!
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது 2006-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி வருமுன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்தார்.
அப்போது அவர் பூந்தமல்லி அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டது.
2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக எந்த செயல்பாடுகளும் இல்லாமல் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
தி.மு.க. ஆட்சி மீண்டும் வந்ததும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார்.
அதன்படி நடந்து முடிந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மருத்துவத்துறை சார்பில் 110 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்...
