தமிழகத்துக்கு வந்த கொரானா ரேபிட் கிட் கருவிகளை வழிமறித்து பறித்து கொண்ட மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்!
தமிழகத்துக்கு வந்த கொரானா ரேபிட் கிட் கருவிகளை வழிமறித்து பறித்து கொண்ட மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்!
இது குறித்து சீமான் வெளியிட்ட அறிக்கை:
கொரானா நோய்த் தொற்று பரவலால் இந்தியாவிலேயே அதிகப்படியான பாதிப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிற மாநிலமாக தமிழகம் இரண்டாவது இடத்திலிருக்கிற இவ்வேளையில், நோய்த் தொற்று குறித்து சோதனை செய்ய சீனாவிலிருந்து தமிழக அரசு இறக்குமதி செய்த 4 இலட்சம் வெகுவிரைவுக் கருவிகளை (RAPID TESTING KIT) மத்திய அரசு இடைமறித்து தன்வசப்படுத்தியிருப்பது எதனாலும் சகிக்கமுடியாத தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும்.
பாஜக அரசு பதவியேற்றது முதல் தொடர்ச்சியாக தமிழின விரோத நடவடிக்கைகளை, தமிழகத்திற்கு வஞ்சகம் செய்யும் பணிகளை திட்டமிட்டு செய்துவருகிறது.
துயர் சூழ்ந்த இந்த பேரிடர் காலத்தில் கூட மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்க...
