நமீதா பட இயக்குனருக்கு கல்தா… ஹீரோவே இயக்குனர் ஆக மீண்டும் களமிறங்கினார்..!
அகம்பாவம் படத்தின் இயக்குனர் வெளியேற்றம் - இரண்டாவது முறை இயக்குனராக களமிறங்கும் தயாரிப்பாளர் வாராகி
ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படம் `அகம்பாவம்'. இந்தப் படத்தில் கதாநாயகியாக நமீதா நடிக்கிறார். திருமணத்திற்குப் பிறகு நமீதா நடிக்கும் முதல் படம் இது. பெண் போராளிக்கும், ஜாதியை வைத்து அரசியல் பண்ணும் ஒரு மோசமான அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் யுத்தத்தை படமாக உருவாக்கி வருகிறார்கள்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, வில்லனாக நடித்து தயாரித்தும் வருகிறார் வாராகி. ‘சத்ரபதி’ படத்தை இயக்கிய ஸ்ரீமகேஷ் இயக்கி வந்தார். தற்போது இப்படத்தில் இருந்து ஸ்ரீமகேஷ் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தயாரிப்பாளர் வாராகி கூறும்போது, ‘இயக்குனர் ஸ்ரீமகேஷ், பட வாய்ப்பு இல்லாமல் மதுவுக்கு அடிமையாகி இருந்தார். அவருடைய வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த, இப்படத்தை ...
