2 மில்லியன் லைக்ஸ்: புது உலக சாதனை படைத்த விஜய்யின் மாஸ்டர் டீஸர்!
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் திரைப்படம் தான் மாஸ்டர்.
மாஸ்டர் படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்ய முடியாமல் இருந்தாலும் விஜய் இல்லாத தீபாவளியா? என்பதைப்போல மாஸ்டர் படத்தின் டீசர் வெளியானது.
இதுவரை வந்த விஜய் படங்களில் முற்றிலும் மாறுபட்டு இருந்த மாஸ்டர் டீசர் விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.
அதன் விளைவாக வெறும் 24 மணி நேரத்தில் 20 மில்லியன்(2 கோடி) பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. அது மட்டுமில்லாமல் வேறு ஒரு முக்கியமான உலக சாதனை படைத்துள்ளது மாஸ்டர் டீசர்.
மிகக் குறுகிய காலத்தில் 2 மில்லியன் லைக் பெற்ற ஒரே டீசர் என்ற சாதனை படைத்துள்ளது. உலக சினிமாவிலேயே இதுதான் முதல் முறையாம். இதனை தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர்....
