ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: விமான நிறுவனம் விற்பனை

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்கும் மத்திய  அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்கும் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தியாவின் பொதுத்துறை விமான சேவை நிறுவனமான ‘ஏர் இந்தியா’ பெரும் கடன் சுமையில் தவித்து வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சுமார் ரூ.60 ஆயிரம் கோடி கடன் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. அளவுக்கு அதிகமான கடன் சுமையால் இந்த நிறுவனம் பயணிகளுக்கு தொடர்ந்து விமான சேவையை வழங்குவதில் சிக்கல் உருவானது. இதேபோல், இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்குவதிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளை விற்பதாக அறிவித்தது. எனினும் நிறுவனத்தின் பங்குகளை வாங்க எந்த நிறுவனங்களும் ஆர்வம் காட்டாததால் இந்த முயற்சி தோல்வி அடைந்தது. இந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை முழுவதும் விற்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதாவது இந்த நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்வதாக மத்திய முதலீ...