செவ்வாய்க்கிழமை, ஜூலை 7
Shadow

Tag: விஷ்ணுவர்தன்

ஷங்கர், லிங்குசாமியை தொடர்ந்து டோலிவுட் பக்கம் செல்லும் பிரபல கோலிவுட் இயக்குனர்!

ஷங்கர், லிங்குசாமியை தொடர்ந்து டோலிவுட் பக்கம் செல்லும் பிரபல கோலிவுட் இயக்குனர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ஷங்கர், லிங்குசாமியை தொடர்ந்து டோலிவுட் பக்கம் செல்லும் பிரபல கோலிவுட் இயக்குனர்! `குறும்பு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். தொடர்ந்து, `அறிந்தும் அறியாமலும்', `பட்டியல்', `சர்வம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், அஜித்தின் `பில்லா', `ஆரம்பம்' படங்களை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான ‘ஷேர்ஷா’ என்கிற பாலிவுட் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இவர் அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றை இயக்க உள்ளாராம். இப்படத்தில் வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களாக இருக்கும் ஷங்கர், லிங்குசாமி, மோகன்ராஜா ஆகியோர் தெலுங்கு படங்களை இயக்கி வரும் நிலையில், தற்போது விஷ்ணுவர்தனும் அந்த ...
முதன்முறையாக யுவன் இன்றி வேறு இசையமைப்பாளருடன் பணியாற்றும் விஷ்ணுவர்தன்!

முதன்முறையாக யுவன் இன்றி வேறு இசையமைப்பாளருடன் பணியாற்றும் விஷ்ணுவர்தன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
முதன்முறையாக யுவன் இன்றி வேறு இசையமைப்பாளருடன் பணியாற்றும் விஷ்ணுவர்தன்! விஜய் நடிப்பில் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற ‘மாஸ்டர்’ படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ, அடுத்ததாக நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளார். இப்படத்தின் மூலம் நடிகர் ஆகாஷ் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அஜித்தை வைத்து ‘பில்லா’, ‘ஆரம்பம்’ போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இப்படத்தை இயக்க உள்ளார். இயக்குனர் விஷ்ணுவர்தன் இதுவரை இயக்கிய தமிழ் படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து உள்ளார். அதனால் இப்படத்திற்கும் அவர்தான் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதர்வாவின் தம்பி ஆகாஷ், தயாரிப்பாளர் சேவியர் பி...