கடும் அமளிக்கு இடையே 3 வேளாண் சட்ட ரத்து மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!
கடும் அமளிக்கு இடையே 3 வேளாண் சட்ட ரத்து மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் தொடங்கியது முதலே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். மேலும், முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
ஒத்திவைப்புக்கு பிறகு, மக்களவையில் கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கியது. அப்போது, மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வழிவகுக்கும் மசோதாவை தாக்கல் செய்தார்.
இதற்கிடையே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சிகளின் பலத்த அமளிக்கு இடையே வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும், வேளாண் சட்ட ரத்து மசோதாவை விவாதிக்...
