சனிக்கிழமை, ஆகஸ்ட் 8
Shadow

Tag: ஷகிலா

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய ஷகிலா!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய ஷகிலா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தமிழ், மலையாளம், தெலுங்கில் 1980 மற்றும் 90-களில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. கேரளாவில் இவரது படங்கள் வசூலில் முன்னணி நடிகர்கள் படங்களை முறியடித்த சம்பவங்களும் நடந்துள்ளன. இவருக்கு பெரிய ரசிகர்கள் வட்டாரம் உள்ளது. ஷகிலாவின் வாழ்க்கை கதை சினிமா படமாகவும் வந்துள்ளது. தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். இந்த நிலையில் ஷகிலாவை திருப்பத்தூரில் நடந்த தனியார் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க அழைத்து இருந்தனர். அப்போது அவரை காண அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு நின்றனர். விழா முடிந்து வெளியே வந்த ஷகிலாவை பார்த்ததும் அவரோடு செல்பி எடுக்கவும், கைகுலுக்கவும் ரசிகர்கள் முண்டியடித்தனர். இதனால் ஷகிலா ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார். அவர்களிடம் இருந்து ஷகிலாவை பாதுகாவலர்கள் கஷ்டப்பட்ட...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷகிலா மகள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷகிலா மகள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷகிலா மகள்! தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நடிகர் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகென் ராவும், 4-வது சீசனில் நடிகர் ஆரியும் வெற்றி பெற்றுள்ளனர். தமிழில் முதல் மூன்று சீசன்களும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தொடங்கப்பட்ட நிலையில், 4-வது சீசன் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைந்தது. இந்நிலையில் பிக்பாஸ் ஐந்தாவது சீசனை ஜூன் மாதம் 3 வாரத்திலிருந்து ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிக்பாஸ் 5 நிகழ்ச்சிக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியிருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இதனிடையே இந்தமுறை கலந்து கொள்ள இருப்பதாக ஒரு சில திரைபிரபலங்களின் பெயரும் அடிபட தொடங்கியுள்ளது. ஏற்கனவே நடிகர்கள் ராதாரவி, மன்...
தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா!

தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
“இப்போது தான் அரசியலில் நுழைந்துள்ளேன். இனி போக போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்”-நடிகை ஷகிலா பேட்டி! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகம் மட்டுமின்...
நடிகை ஷகிலா கட்சியில் இணைந்தார்!

நடிகை ஷகிலா கட்சியில் இணைந்தார்!

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நடிகை ஷகிலா கட்சியில் இணைந்தார்! மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படமாகி வெளியானது. இந்திரஜித் லங்கேஷ் இயக்கிய இப்படத்தில் ரிச்சா சத்தா ஷகிலாவாக நடித்திருந்தார். தற்போது ஷகிலா சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மற்றும் யூடியூப் தளங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தமிழக காங்கிரஸின் மனித உரிமை துறையில் இணைந்திருக்கிறார் நடிகை ஷகிலா. இதற்கான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார் ஷகிலா....