புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: ஷில்பா மஞ்சுநாத்

“அழகை வெளிப்படுத்துவதற்கு வயது ஒரு தடையேயில்லை” ; பேரழகி சச்சு கொடுக்கும் டிப்ஸ்..!

“அழகை வெளிப்படுத்துவதற்கு வயது ஒரு தடையேயில்லை” ; பேரழகி சச்சு கொடுக்கும் டிப்ஸ்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
'கிரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ்' சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் 'பேரழகி ஐ.எஸ்.ஓ'. 'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா' ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சீனியர் நடிகை சச்சு இந்தப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.. படத்தின் கதைப்படி, முந்தைய காலத்தில் வாழ்ந்த ராஜா ஒருவர் தான் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரண்மனை வைத்தியர்களை கொண்டு ஒரு மருந்து கண்டுப்பிடிக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த மருத்துவ குறிப்பு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் கிடைக்கிறது. ஷில்பாவின் பாட்டியாக வரும் சச்சு, அந்த நிறுவனத்தை அணுகி தன்னை இளமையாக மாற்றிக்கொள்ளகிறார். பாட்டி சச்சு, இப்போது அழகான பேத்தியாக மாறிவிடுகிறார். அதன்பின் படத்தில் நடக்க...
நான் ஒரு கமல்…  சச்சும்மா வடிவேலு” -பேரழகி ஷில்பா மஞ்சுநாத் கலாட்டா..!

நான் ஒரு கமல்… சச்சும்மா வடிவேலு” -பேரழகி ஷில்பா மஞ்சுநாத் கலாட்டா..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  “நான் கமல்.. சச்சும்மா வடிவேலு” -பேரழகி ஷில்பா மஞ்சுநாத் கலாட்டா..! கிரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் 'பேரழகி ஐ.எஸ்.ஓ '. 'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா' ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா, நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஆர்.சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ், மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். நாயகி ஷில்பா மஞ்சுநாத் இந்தப்படத்தில் நடித்த தனது அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.. காளி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் என இரண்டு படங்களில் நடித்து இருந்தாலும் தமிழில் முதன்முதல் ஒப்பந்தமான படம் பேரழகி ஐ.எஸ்.ஓ தான். தமிழில் அறிமுகமான முதல் பட...
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம்

HOME SLIDER, REVIEWS
பொன்வண்ணன்னோடு ஏற்பட்ட மனக்கசப்பில் அவரை விட்டு பிரிகிறார் அவரது மனைவி. இவர்களுக்கு ஒரே மகன் கெளதம்(ஹரீஷ் கல்யாண்). தந்தை பொன்வண்ணனின் அரவணைப்பில் வளர்கிறார். தாய் வருவார் வருவார் என ஏங்கி ஏங்கி அவர் மீது வெறுப்படைகிறார் கெளதம். இதனால் ஒரு முரட்டு ஆளாகவே வளர்கிறார். எதற்கெடுத்தாலும் கோபம், அடி, என நண்பர்களோடு ஊர்சுற்றி வருகிறார். பெரிய இடத்து பெண்ணாக வருகிறார் தாரா(ஷில்பா மஞ்சுநாத்). மோதலில் ஆரம்பிக்கும் இருவரது சந்திப்பு பின் காதலில் இணைகிறது. கெளதமின் முரட்டுத்தனத்தால் அவ்வப்போது இருவருக்கும் சண்டை வருகிறது. வாழ்க்கை என்ற கட்டத்திற்குள் போகும் போது தாரா சில முக்கியமான முடிவுகள் எடுக்க நினைக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது.. இவர்களது காதல் ஜெயித்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை. கதையின் நாயகனாக ஹரீஷ் கல்யாண் பொருத்தமான தேர்வு தான். ஆக்‌ஷன் களத்திற்கு புதியவர் என்றாலும், ஏற்றுக் கொ...
“ஷாருக்கான் போல இந்திய அளவில் ஹரிஷ் கல்யாண் புகழ் பெறுவார்’ ; பொன்வண்ணன் பாராட்டு

“ஷாருக்கான் போல இந்திய அளவில் ஹரிஷ் கல்யாண் புகழ் பெறுவார்’ ; பொன்வண்ணன் பாராட்டு

CINI NEWS, செய்திகள்
பிக் பாஸ் சீசன்-2 மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹரிஷ் கல்யாணுக்கு பியார் பிரேமா காதல் என்கிற படம் வெற்றியை கொடுத்து ஒரு கதாநாயகனுக்கான அந்தஸ்தையும் கொடுத்தது. இதையடுத்து தற்போது இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் ஹரிஷ் கல்யாண். விஜய்சேதுபதி நடித்த புரியாத புதிர் என்கிற படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இந்த படத்தை இயக்கியுள்ளார். காளி படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷில்பா மஞ்சுநாத் இதில் கதாநாயகியாக நடிக்க, பொன்வண்ணன், பாலசரவணன் மற்றும் மாகாபாஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் மார்ச் 15-ம் தேதி இந்த படம் ரிலீஸாவதை முன்னிட்டு இந்த படத்தின் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகரும் இயக்குனருமான பொன்வண்ணன், “ஹரிஷ் கல்யாணை பார்க்கும்போது அவர் தமிழில் மட்டுமல்ல இந்திய...