கமல் மகள் ஸ்ருதிஹாசன் காதலுக்கு குட் பை சொன்னார்…!
நடிகர் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் வெளிநாட்டு காதலரை விரைவில் கரம் பிடிப்பார் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் காதல் முறிந்து போய் உள்ளது.
காதல் கட் ஆனதற்கு யார் மீதும் யாரும் குற்றம் சுமத்திக் கொள்ளாமல் நாசுக்காக பிரிந்து விட்டார்கள்.
திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து இசை நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டி வரும் ஸ்ருதிஹாசன், ஐரோப்பாவைச் சேர்ந்த மைக்கேல் கோர்சல் என்பவரை காதலித்து வந்தனர். மேலும் இந்த ஆண்டிற்குள் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ளாவோம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது இந்த காதல் பிரேக் அப் ஆகி முடிவுக்கு வந்துள்ளது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதி ஹாசன் கூறியதாவது, 'மிண்டும் ஒரு புதிய ஆரம்பம். காதல் அனுபவங்களுக்கு நன்றி . இனிமேல் சினிமா, இசை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தவுள்ளேன். இருப்பினும் ஒரு சிறந்த காதல்' என்று ...
