வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

கமல் மகள் ஸ்ருதிஹாசன் காதலுக்கு குட் பை சொன்னார்…!

 

நடிகர் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் வெளிநாட்டு காதலரை விரைவில் கரம் பிடிப்பார் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் காதல் முறிந்து போய் உள்ளது.

காதல் கட் ஆனதற்கு யார் மீதும் யாரும் குற்றம் சுமத்திக் கொள்ளாமல் நாசுக்காக பிரிந்து விட்டார்கள்.


திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து இசை நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டி வரும் ஸ்ருதிஹாசன், ஐரோப்பாவைச் சேர்ந்த மைக்கேல் கோர்சல் என்பவரை காதலித்து வந்தனர். மேலும் இந்த ஆண்டிற்குள் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ளாவோம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த காதல் பிரேக் அப் ஆகி முடிவுக்கு வந்துள்ளது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதி ஹாசன் கூறியதாவது, ‘மிண்டும் ஒரு புதிய ஆரம்பம். காதல் அனுபவங்களுக்கு நன்றி . இனிமேல் சினிமா, இசை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தவுள்ளேன். இருப்பினும் ஒரு சிறந்த காதல்’ என்று பதிவு செய்துள்ளார்.

முன்னதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த மைக்கேலின் புகைப்படங்களையும் அவர் நீக்கிவிட்டார். அதே போல் மைக்கேல் தனது சமூக வலைத்தளத்தில் ‘வாழ்க்கை உலகின் எதிரெதிர் பக்கங்களில் இருந்து துரதிர்ஷ்டவசமாக நம்மை காப்பாற்றுகிறது.

எனவே நாம் தனியாக இருப்பது போல் நடக்க வேண்டும், ஆனால் இந்த இளம் பெண் எப்போதும் எனது சிறந்த துணையாக இருப்பார்,எப்போதும் அவர் எனக்கு ஒரு சிறந்த நண்பராக இருப்பார் என்று நம்புகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

ஸ்ருதி ஹாசன் இப்போது ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வருகிறார்.


இந்த சூழலில் ஸ்ருதி ஹாசன் தனது காதல் கட் ஆனதை அப்பா கமல்ஹாசன் போல ஜஸ்ட் லைக் தட் விஷயமாக எடுத்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு போயிருக்கிறார்.

1,013 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன