‘ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னையில் ஒவ்வொரு சாலையிலும் ஞாயிற்று கிழமைகளில் காலை 6 முதல் 9 மணி வரை சுமார் 800 முதல் 1000 மீட்டர் வரையிலான சாலையில் 5 வாரங்களுக்கு "ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்" நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த சாலைகளில் 3 மணி நேரத்திற்கு முழுவதுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ் - நோக்கங்கள் தொடர்பான நடனம், பாட்டு, இசை நிகழ்ச்சிகள், இலவச சைக்கிள் பயணம், ஸ்கேட்டிங், கயிறு இழுத்தல், கைப்பந்து, பூப்பந்து போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி இந்த வாரம் அண்ணா நகரில் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.
9 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேட்மிட்டன், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி மக்களை உற்சாகப்படுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள...
