திகிலூட்டும் ஷாக் காட்சிகளுடன் களத்துக்கு வருகிறது “அந்த நாள்”
க்ரீன் மேஜிக் என்டர்ட்ரெய்ன்மென்ட்டின் ஆர்யன் ஷ்யாம் நடித்துள்ள “அந்த நாள்” விரைவில் வெளியாக உள்ளது.
அந்த நாள் என்பது பிளாக் மேஜிக் மற்றும் நரபலியை அடிப்படையாகக் கொண்ட க்ரைம் த்ரில்லர். நரபலியை கருப்பொருளின் காரணமாக கொண்ட திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழை CBFC மறுத்தது.
தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்யன் ஷ்யாம் ரிவைசிங் கமிட்டி வாரியத்திடம் முறையிட்டார், அதன்பின் படம் "ஏ" சான்றிதழுடன் கட்ஸுடன் அனுமதிக்கப்பட்டது.
திரைப்படத்தின் உள்ளடக்கம் பிளாக் மேஜிக் மற்றும் "சடங்கு சார்ந்த மனித தியாகம்" ஆகியவற்றைக் கையாள்வதால், தயாரிப்பாளர்/நடிகர் ஆர்யன் ஷ்யாம் படத்தை ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் அல்லாமல் க்ரீன் மேஜிக் என்டர்டெயின்மென்ட்டின் கீழ் வெளியிட முடிவு செய்துள்ளார்.
இப்படத்தை விவி இயக்குகிறார், சதீஷ் கதிரவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார், இசையமைப்பாளர் என்.எஸ். ராபர்ட் சற்குணம்.
...