புதன்கிழமை, மே 15
Shadow

Tag: அர்ச்சனா

16 தையல்… நிற்க முடியவில்லை… அர்ச்சனா உருக்கம்!

16 தையல்… நிற்க முடியவில்லை… அர்ச்சனா உருக்கம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
16 தையல்... நிற்க முடியவில்லை... அர்ச்சனா உருக்கம்! சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் அர்ச்சனா. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் போட்டியாளராக பங்கேற்று கவனம் பெற்றார். சமீபத்தில் இவருக்கு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை பெற்றதாக சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு அர்ச்சனா முதல் முறையாக யூடியூப் சேனலில் நேரலையில் வந்து பேசினார். அவரை பார்த்த ரசிகர்களோ, எப்பொழுது மீண்டும் வேலைக்கு வருவீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘என்னால் இப்போ கூட வர முடியும். ஆனால் என் வலது தொடையில் 16 தையல் போடப்பட்டிருக்கிறது. 16 தையல் போடப்பட்டிருப்பதால் கால் பலவீனமாக இருக்கிறது. ஷூட்டிங்கிற்கு வந்தால் 15, 16 மணிநேரம் நிற்க வேண்டும். என்னால் தற்போது அவ்வளவு நேரம் நிற்க முடியாது. நா...
சீதக்காதி தமிழ் சினிமாவின் நல்ல அடையாளம்..!

சீதக்காதி தமிழ் சினிமாவின் நல்ல அடையாளம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
படத்தின் நாயக கதாபாத்திரங்கள்  எப்போதும் நேர்மையான நபர்களாக சித்தரிக்கப்படும் என்ற ஒரு குறிப்பிட்ட விஷயம் உண்டு. அவர்கள் திரையில் ஆதிக்கம் செலுத்தும் போது, உண்மையில் நாம் கவனிக்க வேண்டியது அவர்களின் மனைவிமார்களை தான்.  அவர்கள் பேசுவதற்கு அதிக வார்த்தைகளே இருக்காது, ஆனால் அவர்களது மௌனத்தில் இருக்கும் அவர்களின் துன்பங்களை உணர முடியும். இந்த குணங்களை நீங்கள் ஒரு பிரபல நாடக கலைஞர் அய்யாவின் மனைவி லக்‌ஷ்மியிடம் காணலாம். பிரபல நடிகை அர்ச்சனா அந்த லக்‌ஷ்மி  கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். "நீங்கள் பொருள் தேடி ஓடாத, கலைஞர் ஒருவரின் ஆன்மாவாக  இருக்கையில், அது ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலை. இது தியாகம் என்று சொல்ல முடியாது, ஆனால் கலையை நேசிக்கும், சுவாசிக்கும் ஒருவரின் துணையாக, பக்க பலமாக இருக்கும் ஒரு பொறுப்பு. நான் அப்படிப்பட்ட உணர்ச்சிகளுக்குள் கட்டுண்டு க...