வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: அஷோக் செல்வன்

வாணி போஜன் அற்புதமான நடிகையாம் சொல்கிறார் “ஓ மை கடவுளே” ரித்திகா சிங்!

வாணி போஜன் அற்புதமான நடிகையாம் சொல்கிறார் “ஓ மை கடவுளே” ரித்திகா சிங்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  முதல் படத்திலேயே தேசிய விருதை வென்று இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகையானவர் ரித்திகா சிங். மிகக் கவனமுடன் தன் மனதிற்கு நெருங்கிய கதாப்பாத்திரங்களை மட்டுமே செய்து வருகிறார். சிறு இடைவெளிக்கு பிறகு தமிழில், அவர் நடிப்பில்,  பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகும் “ஓ மை கடவுளே” படம் ரசிகர்களிடம் பலத்த  வரவேற்பு பெற்றிருப்பதில் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார். படம் குறித்து நடிகை ரித்திகா சிங் பகிர்ந்து கொண்டதாவது... “ஓ மை கடவுளே” என் வாழ்வில் ஸ்பெஷலான படம். 3 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வந்திருக்கிறேன். மனதிற்கு பிடித்த நல்ல கதாப்பத்திரங்கள் மட்டுமே செய்வது என்கிற முடிவில் இருந்தேன். இந்தப்படத்தின் கதை கேட்டபோது இது எனக்கு கிடைத்த தங்கவாய்ப்பாக தோன்றியது. இக்கதையில் முதலில் என்னை ஈர்த்த விசயம், நாயகி ஒரு கிறிஸ்த்துவ மணப்பெண்ணாக வருவது தான். என் நெடுநாளைய சிறு வயது கனவு...