சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

Tag: கைதி

அஜய் தேவ்கன் படத்தின் இரண்டாவது டீசர் வெளியானது!

அஜய் தேவ்கன் படத்தின் இரண்டாவது டீசர் வெளியானது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2023-ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, 'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இதில் கார்த்தி கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார். மேலும் நரேன் கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்கிறார். இப்படத்தை அஜய் தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், 'போலா' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இரண்டாவது டீசர் இன்று வெள...
ஜப்பானிய மொழியில் வெளியாகும் கார்த்தியின் பிளாக்பஸ்டர் ஹிட் படம்!

ஜப்பானிய மொழியில் வெளியாகும் கார்த்தியின் பிளாக்பஸ்டர் ஹிட் படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜப்பானிய மொழியில் வெளியாகும் கார்த்தியின் பிளாக்பஸ்டர் ஹிட் படம்! கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் கார்த்தியுடன் நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இதில் கார்த்தி ஆயுள் தண்டனை கைதியாக நடித்திருந்தார். தமிழ் சினிமா ரசிகர்களை எல்லாம் கடந்து, இந்தியளவில் பல பிரபலங்களின் பாராட்டுக்களை பெற்றதோடு, பல்வேறு விருதுகளையும் வென்றது. தற்போது இந்தியில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் கைதி படத்தின் 2-ம் பாகமும் உருவாக உள்ளது. இந்நிலையில், கைதி படம் ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராகி உள்ளது. ஜப்பானில் ‘கைதி டில்லி’ என்ற பெயரில் இப்படம் வருகிற நவம்பர் 19-ந் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் ஒன்று ஜப்பானில் ரிலீசாவது இதுவே முதன்முறை. ஏற்க...
இந்தியில் முதன்முதலாக கால் பதிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.!

இந்தியில் முதன்முதலாக கால் பதிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இந்தியில் முதன்முதலாக கால் பதிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்து, நடிகர் கார்த்தி நடித்த படம் 'கைதி'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தீபாவளிக்கு வெளியாகி உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல், கார்த்தி இதுவரை நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் முதன் முறையாக 100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஹிந்தியிலும் இப்படத்தை ரீமேக் செய்கிறார்கள். இதன் மூலம் இந்தியில் முதன் முதலாக கால் பதிக்கிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்கள். இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்....
ராட்சசி ஆன ஜோதிகா டீசர் ரிலீஸ்

ராட்சசி ஆன ஜோதிகா டீசர் ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ராட்சசி. ஜோதிகா தலைமை ஆசிரியராக நடித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது ஜோதிகாவுடன் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ராட்சசி படத்தின் டிரைலர், கார்த்தி நடித்துள்ள கைதி படத்தின் டீசரை சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் என்ஜிகே படத்தின் இடைவேளையின் போது திரையிடப்படுகிறது. என்ஜிகே, ராட்சசி, கைதி ஆகிய மூன்று படங்களையுமே ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது...