சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

Tag: சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடு மகனின் பாதுகாப்பை திரும்ப பெற்ற ஜெகன் மோகன் ரெட்டி..!

சந்திரபாபு நாயுடு மகனின் பாதுகாப்பை திரும்ப பெற்ற ஜெகன் மோகன் ரெட்டி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆந்திராவில் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றதில் இருந்து தெலுங்குதேசம் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தீவிரம் காட்டி  வருகிறார். அந்த வகையில், சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது மக்களை சந்திப்பதற்காக கிருஷ்ணா நதிக்கரையோரம் சந்திரபாபு நாயுடு உத்தரவால் கட்டப்பட்ட சொகுசு வீடு மற்றும் அதன் அருகில் உள்ள மாநாடு கட்டிடத்தை இடிக்க ஜெகன் மோகன் ரெட்டி நேற்று முந்தினம் உத்தரவிட்டார். சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேசுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பாதுகாப்பை திரும்ப பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார். அதோடு போலீசாருக்கு வார விடுமுறை, வயதானவர்களுக்கான ஓய்யூதிய தொகை உயர்வு என பல அதிரடிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
நாட்டுக்காக எதையுமே செய்யாத வெற்று மனிதர் மோடி , எதற்கும் தகுதி இல்லாதவர்  – சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

நாட்டுக்காக எதையுமே செய்யாத வெற்று மனிதர் மோடி , எதற்கும் தகுதி இல்லாதவர் – சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடி மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சுமத்தியுள்ளார். ‘தெலுங்கானா மாநில பிரிவினைக்கு பின்னர் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று பாராளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை மோடி நிறைவேற்ற தவறி விட்டார். குஜராத் முதல் மந்திரியாக 12 ஆண்டுகள் பதவியில் இருந்தபோது தனது சொந்த மாநிலத்துக்கே அவர் எதுவும் செய்யவில்லை. ஆனால், பல பெரிய காரியங்களை செய்துவிட்டதாக எல்லோரையும் நம்ப வைத்தார். நாங்கள் அனைவரும்கூட இதை நம்பினோம். இந்த ஒட்டுமொத்த நாட்டு மக்களும் நம்பினார்கள், ஆனால், கடைசியில் அது மோசடி என்று தெரியவந்தது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் குஜராத்தை நாங்கள் பின்னுக்குத்தள்ளி முன்னேறி சென்று விடுவோம் என்பதால் மோடி எங்களை வஞ்சித்து விட்டார். அன்று தன்னைவிட பெரிய தலைவர் யாரும் இல்லை ...
ராஜஸ்தான், தெலுங்கானாவில் பிரசாரம் ஓய்ந்தது…  நாளை ஓட்டுப்பதிவு

ராஜஸ்தான், தெலுங்கானாவில் பிரசாரம் ஓய்ந்தது… நாளை ஓட்டுப்பதிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  2019 ஆண்டு நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 3 மாநிலங்களில் ஓட்டுப்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது. ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 2 மாநிலங்களிலும் நாளை (7-ந் தேதி) ஓட்டுப்பதிவு நடக்கிறது. 200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபை தேர்தல், பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளுக்கும் முக்கியமானது. கடந்த 25 ஆண்டுகளாக அங்கு ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவதால், ஆட்சியை தக்க வைக்க பாரதீய ஜனதாவும், கைப்பற்றுவதற்கு காங்கிரசும் வரிந்து கட்டுகின்றன. இங்கு ராம்கார் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணம் அடைந்து விட்டதால் தேர்தல் ஒத்தி போடப்பட்டுள்ளது. 199 தொகுதிகளில் மட்டுமே நாளை ஓட...
ஆந்திராவில் சிபிஐயை தடைசெய்தது சந்திரபாபு நாயுடு அரசு

ஆந்திராவில் சிபிஐயை தடைசெய்தது சந்திரபாபு நாயுடு அரசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆந்திராவில் சோதனைகள் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள வழங்கிய அனுமதியை அம்மாநில அரசு திரும்ப பெற்றது. இந்த உத்தரவை அடுத்து சிபிஐ ஆந்திரா எல்லைக்குள் எந்தஒரு சோதனையும் மேற்கொள்ள முடியாது, விசாரிக்கவும் முடியாது. சிபிஐ டெல்லி சிறப்புப்படை பிரிவு சட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. சட்டத்தின்படி, டெல்லியில் மட்டுமே சிபிஐ அதிகாரம் பெற்றது. பிற மாநிலங்களில் நுழைய அம்மாநிலங்களில் ஒருமனதான சம்மதத்தை பெற வேண்டியது கட்டாயமாகும். இந்நிலையில் ஆந்திராவில் சிபிஐயின் அதிகாரத்தை தடுக்கும் வகையில் ரகசிய உத்தரவை அம்மாநில உள்துறை கொள்கை செயலாளர் ஏ.ஆர். அனுராதா நவம்பர் 8-ம் தேதி பிறப்பித்துள்ளார். இது, நேற்று இரவு வெளியே தெரியவந்துள்ளது. டெல்லி சிறப்பு போலீஸ் படை சட்டத்தின் பிரிவு 6-ன் படி மாநில அரசு ஒப்புதலை திரும்ப பெறலாம். அதன்படியே மாநில அரசு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அனுமதி வழங்கிய மூன்று...