செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

Tag: பிரசாந்த் நீல்

சலார் படத்தின் அப்டேட்!

சலார் படத்தின் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தின் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் சலார் படத்தையும் தயாரிக்கிறது. இந்த நிலையில் சலார் படத்தின் அப்டேட் குறித்த தகவலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்து தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று பகல் 12.58 மணிக்கு சலார் படம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ...
விஜய் சேதுபதி கே.ஜி.எப். இயக்குனருடன் கூட்டணி!

விஜய் சேதுபதி கே.ஜி.எப். இயக்குனருடன் கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் சேதுபதி கே.ஜி.எப். இயக்குனருடன் கூட்டணி! கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக சலார் படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சலார் படத்தை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே சைரா நரசிம்மா ரெட்டி, உப்பென்...
பிரபாஸை தொடர்ந்து பிரபல நடிகரின் படத்தை இயக்கும் கே.ஜி.எப். இயக்குனர்!

பிரபாஸை தொடர்ந்து பிரபல நடிகரின் படத்தை இயக்கும் கே.ஜி.எப். இயக்குனர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரபாஸை தொடர்ந்து பிரபல நடிகரின் படத்தை இயக்கும் கே.ஜி.எப். இயக்குனர்! கே.ஜி.எப் எனும் மிகப்பெரிய வெற்றிப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். அடுத்ததாக கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக இயக்கி முடித்துள்ள இவர், தற்போது பிரபாஸை வைத்து ‘சலார்’ எனும் படத்தை இயக்கி வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சலார் படத்தை தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்க உள்ள புதிய படத்தில், ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். சமீபத்திய பேட்டியில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், இதனை உறுதிப்படுத்தியுள்ளார். நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
அரசியல் நிருபராக களமிறங்கும் ஸ்ருதிஹாசன்!

அரசியல் நிருபராக களமிறங்கும் ஸ்ருதிஹாசன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
அரசியல் நிருபராக களமிறங்கும் ஸ்ருதிஹாசன்! பிரபாஸ் நடிப்பில் ராதே ஷ்யாம், சல்லார், ஆதிபுருஷ் ஆகிய படங்கள் தயாராகின்றன. இதில் சல்லார் திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். இந்த வருடம் ஜனவரியில் ஸ்ருதி நடிப்பதை சல்லார் படக்குழு முறைப்படி அறிவித்தது. தெலுங்கு, கன்னடத்தில் தயாராகும் சல்லார் திரைப்படம், தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒரேநேரத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார். ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக இது தயாராகிறது. இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசனின் வேடம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அவர் இதில் அரசியல் நிருபராக நடிக்கிறார். இது மிக முக்கியமான வேடம் என்கிறது படக்குழு. சென்ற வருட இறுதியில் சல்லார் திரைப்படம் தொடங்கியது. இந்த வருட ஆரம்பத்தில் படப்பிடிப்பை நடத்தினர். தற்போது ராதேஷ்யாம் படத்தின் இறுதிக்கட்ட ...
‘கே.ஜி.எப்’ இயக்குனருடன் இணையும் விஜய்!

‘கே.ஜி.எப்’ இயக்குனருடன் இணையும் விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘கே.ஜி.எப்’ இயக்குனருடன் இணையும் விஜய்! கே.ஜி.எப் எனும் மிகப்பெரிய வெற்றிப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். அடுத்ததாக கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக இயக்கி முடித்துள்ள அவர், தற்போது பிரபாஸை வைத்து ‘சலார்’ எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கப் பல்வேறு முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாகவும், இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளதாகவும் பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது. மேலும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்க உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் கோலிவுட் வட்டாரத்தினர் இது உண்ம...