வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: முழு ஊரடங்கு

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை! தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வருகிற 7-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கால் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், சுகாதாரச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்....
முழு ஊரடங்குக்கு விரைவில் முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

முழு ஊரடங்குக்கு விரைவில் முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முழு ஊரடங்குக்கு விரைவில் முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வீடியோவில் பேசி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது, அனைவருக்கும் வணக்கம். எல்லாரும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்து தான் மற்றொருவருக்குப் பரவுகிறது. அதனால் தொற்று தங்கள் மீது பரவாமல் இருக்க ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும். அதே போல் நீங்களும் மற்றவர்களுக்கு பரப்பிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் சங்கிலியை உடைத்தாலே கொரோனா பரவலைத் தடுத்துவிட முடியும். கடந்த 24-ந்தேதி முதல் 7 நாட்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் 7 நாட்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 24-ந்தேதி முதல் சென்...
முழு ஊரடங்கால் நல்ல பலன் கிடைத்தது- 37 மாவட்டங்களில் பாதிப்பு சரிவு!

முழு ஊரடங்கால் நல்ல பலன் கிடைத்தது- 37 மாவட்டங்களில் பாதிப்பு சரிவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முழு ஊரடங்கால் நல்ல பலன் கிடைத்தது- 37 மாவட்டங்களில் பாதிப்பு சரிவு! தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2-வது அலை பரவத் தொடங்கியது. இதன் பின்னர் ஏப்ரல் தேர்தல் நடைபெற்ற நிலையில் நோயின் தாக்கம் மேலும் அதிகரித்தது. கடந்த 12-ந்தேதி அன்று தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து இருந்தது. இதன் பிறகு நோயின் தாக்கம் அனைத்து மாவட்டங்களிலும் அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்த தினசரி பாதிப்பு கடந்த 20-ந்தேதி அன்று 35 ஆயிரத்தை கடந்தது. அன்று 35,579 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது. அதற்கு மறுநாள் (21-ந்தேதி) 36,194 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது. இதுவே அதிகபட்ச தினசரி பாதிப்பாகும். இந்த நிலையில் கடந்த 24-ந்தேதியில் இருந்து தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக 26-ந்தேதியில் இருந்து நோயின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களில் ம...
முழு ஊரடங்கு நீடிக்குமா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

முழு ஊரடங்கு நீடிக்குமா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முழு ஊரடங்கு நீடிக்குமா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்! காஞ்சிபுரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- ஊரகப்பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியுள்ளன. கொரோனாவை வெல்ல வேண்டும் என்றால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா குறித்த விழிப்புணர்வு முழு அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே முழு ஊரடங்கு. எவ்வித தளர்வும் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதன் பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது. அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் முழு ஊரடங்கின் பலன் மேலும் தெரிய ஆரம்பிக்கும். தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம்.  கொரோனா சிகிச்சைக்கு தேவையான படுக்கைகளும் தற்போது போதுமான அளவில் உள்ளன. 18 முதல...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை! கொரோனா 2-வது அலை பரவல் தமிழகத்தையே ஆட்டிவைத்து கொண்டிருக்கிறது. தடுப்பூசி போடும் பணிகளும், தடுப்பு நடவடிக்கைகளும் என அரசு ஒருபுறம் நடவடிக்கைகளை கையாண்டாலும், கொரோனா பரவல் தீவிரம் குறைந்தபாடில்லை. இரவு நேர ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு, கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு என பல கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் கொரோனா வீரியத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையே இருக்கிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் ஒருவார காலம் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்தார். ஊரடங்கையொட்டி பொதுமக்கள் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள ஏதுவாக 2 நாட்கள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கடைகள் திறக்கப்பட்டன. மக்களும் தேவையான பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொண்டனர். அந்தவகையில் தமிழகம் முழுவதும் ஒருவார கால ...
தமிழகம் முழுவதும் 4,380 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை- தமிழக அரசு ஏற்பாடு!

தமிழகம் முழுவதும் 4,380 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை- தமிழக அரசு ஏற்பாடு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகம் முழுவதும் 4,380 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை- தமிழக அரசு ஏற்பாடு! இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையொட்டி கடந்த 2 நாட்களாக அனைத்து கடைகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டது. மக்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக இந்த தளர்வு வழங்கப்பட்டது. ஏராளமானோர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். என்றாலும் காய்கறி, பழம் ஆகியவை மக்களின் அன்றாட தேவைக்கு மிகவும் அவசியமாகும். எனவே அவற்றை அரசு மூலம் வாகனங்களில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரு வார காலம் நடமாடும் வாகனங்கள் மூலம் நாள்தோறும் வீதி வீதியாக வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. வீதி, வீதியாக சென்று வீடுகளிலேயே இவை விற்பனை செய்யப்படுகின்றன. வேளாண் துறை சார்பில் தோட்டக்கலையினர் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி...
தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு அமலுக்கு வந்தது!

தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு அமலுக்கு வந்தது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு அமலுக்கு வந்தது! தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், சட்டமன்ற குழு உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களை கலந்து பேசி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து மக்கள் நடமாட்டத்தை குறைக்க தமிழகத்தில் படிப்படியாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆரம்பத்தில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவ...
ஊரடங்கு நீட்டிப்பா?-முதலமைச்சர் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பா?-முதலமைச்சர் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊரடங்கு நீட்டிப்பா?-முதலமைச்சர் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை! தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 24-ந்தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். நாளை காலை 10 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவுடனும், பின்னர் எம்.எல்.ஏ.க்கள் குழுவுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஆலோசனைக்கு பின்னர் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்பது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது....
இ-பதிவு பெறுவதற்கான காரணங்களில் திருமணமும் சேர்ப்பு!

இ-பதிவு பெறுவதற்கான காரணங்களில் திருமணமும் சேர்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இ-பதிவு பெறுவதற்கான காரணங்களில் திருமணமும் சேர்ப்பு! தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றாலும் அவசர பயணத்துக்காக இ-பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இ-பதிவு முறை நேற்று முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால் இ-பதிவு பெறாமல் யாராவது வாகனங்களில் வெளியில் சுற்றினால் அவர்களது வாகனங்கள் கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இ-பதிவு முறையில் ஏராளமானோர் திருமணத்திற்காக பயணிப்பதால் அந்த காரணம் நீக்கப்பட்டிருந்தது. தற்போது உரிய ஆவணங்களுடன் இ-பதிவு முறையில் திருமணத்திற்காக பயணிக...
தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை தீவிரம்!

தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை தீவிரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை தீவிரம்! கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 10-ந்தேதி முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. வருகிற 24-ந்தேதி வரையில் அத்தியாவசிய கடைகளான காய்கறி, மளிகை கடைகள் மட் டும் காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை திறந்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் முழு ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டு இருந்தது. அதே நேரத்தில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி வெளியிட்ட அறிக்கையில், “ஊரடங்கை மீறி வெளியில் வரும் மக்களிடம் போலீசார் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது” என்று தெரிவித்தார். இதன் காரணமாக சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் ஊரடங்கை மீறி வெளியில் வந்தவர்களை போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதனால் தேவையி...