தமிழகம் முழுவதும் 4,380 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை- தமிழக அரசு ஏற்பாடு!
இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையொட்டி கடந்த 2 நாட்களாக அனைத்து கடைகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டது.
மக்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக இந்த தளர்வு வழங்கப்பட்டது. ஏராளமானோர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.
என்றாலும் காய்கறி, பழம் ஆகியவை மக்களின் அன்றாட தேவைக்கு மிகவும் அவசியமாகும். எனவே அவற்றை அரசு மூலம் வாகனங்களில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஒரு வார காலம் நடமாடும் வாகனங்கள் மூலம் நாள்தோறும் வீதி வீதியாக வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. வீதி, வீதியாக சென்று வீடுகளிலேயே இவை விற்பனை செய்யப்படுகின்றன.
வேளாண் துறை சார்பில் தோட்டக்கலையினர் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை காய்கறிகள் விற்பனை செய்கிறார்கள். சென்னையில் 1,610 வாகனங்களில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 4,380 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
348 Views

