வியாழக்கிழமை, ஜூன் 1
Shadow

Tag: Corona virus

அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு !

அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு !

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி உள்ளது. இந்நிலையில் இந்தி திரையுல சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 79 வயதான அமிதாப் பச்சனுக்கு நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள அமிதாப், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு கூர்ந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். எனினும் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளாரா அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாரா என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல்முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமிதாப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபின் குணமடைந...
இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா!

இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
பகல் நிலவு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் மணிரத்னம். அதன்பின் மௌன ராகம், நாயகன், தளபதி, ரோஜா, ராவணன் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் என்கிற வரலாற்று கதையம்சம் கொண்ட படம் விரைவில் வெளிவரவுள்ளது. இந்நிலையில், இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்- அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்- அரசு அதிரடி அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. சென்னை ஐஐடியில் கடந்த 3 நாட்களில் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மக்கள் மீண்டும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் இன்று முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசிகளை மக்கள் தவறாமல் செலுத்திகொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் பிற மாநிலங்களிலும் தற்போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிலும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ...
குஜராத்தில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் அறிகுறி!

குஜராத்தில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் அறிகுறி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா வைரஸ்  அடிக்கடி உருமாற்றம் பெற்று புதிய வகையாக மாறி பரவி வருகிறது. இதுவரை காமா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று பல்வேறு வடிவங்களை கொரோனா வைரஸ் எடுத்து விட்டது. ஒமைக்ரான் வைரசில் இருந்து 4 வகையான துணை உருமாற்றங்கள் நிகழ்ந்தன. அதில் பிஏ1, பிஏ.2 ஆகிய 2 வகை வைரசுகள் தற்போது உலகம் முழுக்க பரவி உள்ளன. இந்த நிலையில் பிஏ.1, பிஏ.2 ஆகிய 2 வைரசுகளும் கலந்து எக்ஸ்-இ என்ற புதிய வகை கொரோனா வைரசை தோற்றுவித்துள்ளன. இந்த எக்ஸ்-இ வைரஸ் முந்தைய கொரோனா வைரசுகளை விட 10 மடங்கு அதிவேகமாக பரவும் ஆற்றல் கொண்டது. இது ஒருவரை தாக்கினால் உடலில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது இதுவரை உறுதியாகவில்லை. என்றாலும் இந்த வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று பெரும்பலான நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலகம் முழுக்க சுமார் 600 பேருக்கு எக்ஸ்-இ கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்ப...
புதிதாக 2,876 பேருக்கு தொற்று- கொரோனா தினசரி பாதிப்பு சற்று அதிகரிப்பு!

புதிதாக 2,876 பேருக்கு தொற்று- கொரோனா தினசரி பாதிப்பு சற்று அதிகரிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  இந்தியாவில் கொரோனாவால் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீப நாட்களாக தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து கடந்த 13-ந் தேதி 3,116 ஆக இருந்தது. மறுநாள் 2,500 ஆக குறைந்த நிலையில், நேற்று 2,568 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 29 லட்சத்து 98 ஆயிரத்து 938 ஆக உயர்ந்தது. கேரளாவில் கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்தது. இந்நிலையில் அங்கு புதிய பாதிப்பு 1,193 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 98 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 72 பேர் அடங்குவர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,16,072 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 3,884 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணம் அடை...
சீனாவில் புதிய வைரஸ் பரவல்?

சீனாவில் புதிய வைரஸ் பரவல்?

HOME SLIDER, World News, உலக செய்திகள்
  சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 221-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 38.74 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தநிலையில், சீனாவில் அடுத்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் வடகிழக்கில் தொழிற்சாலைகள் நிறைந்த சாங்சன் பகுதியில்  உள்ளது. இந்த நகரில் ஏறக்குறைய 90 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நகரில் தான் புதிய வைரஸ் மக்களுக்கு பரவி வருகிறது. இதையடுத்து, இந்த சாங்சுன் நகர் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஏ.பி. செய்தி நிறுவ...
கொரோனா 3-ம் அலை பாதிப்பு ஒரே வாரத்தில் 45 சதவீதம் குறைந்தது!

கொரோனா 3-ம் அலை பாதிப்பு ஒரே வாரத்தில் 45 சதவீதம் குறைந்தது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனாவின் உருமாறிய வடிவமான ஒமைக்ரான் வைரஸ் பரவலால் கடந்த டிசம்பர் இறுதியில் இருந்து இந்தியாவில் தினசரி பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியது. தினசரி பாதிப்பு 6 ஆயிரத்தில் இருந்து நாள்தோறும் படுவேகமாக உயர்ந்தது. முதல் 2 அலைகளை விட 6 மடங்கு வேகத்தில் தினசரி பாதிப்பு அதிகரித்ததால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரம் நாடு முழுவதும் மக்களுக்கு 160 கோடி டோசுக்கும் மேல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்ததால் உயிரிழப்புகள் குறைவாகவே இருந்தது. மேலும் நோயின் தீவிரமும் குறைவாகவே காணப்பட்டதால் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் வீட்டு தனிமையிலேயே குணம் அடைந்தனர். இதனால் 3-ம் அலை குறுகிய காலத்தில் உச்சம் அடைந்தது. கடந்த மாதம் 21-ந்தேதி 3.47 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளானதே இந்த அலையின் உச்சமாக சுகாதாரத்துறையினர் அறிவித்தனர். அதன் பிறகு தினசரி பாதிப்பு நாள்...
கேரளாவில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு!

கேரளாவில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்ததால் அங்கு பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 26 ஆயிரத்து 729 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. கேரளாவில் கொரோனா தொற்று குறைந்ததால் அங்கு பள்ளி, கல்லூரிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி இன்று முதல் மாநிலம் முழுவதும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டன. பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கு தெர்மல் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை நடத்தி வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். வகுப்புகளுக்கு வர விரும்பாத மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பாடங்களை படிக்கலாம் எனவும் அரசு அறிவித்து உள்ளது. ஒன்று முதல் 9-ம் வகுப்...
நடிகர் சரத்குமாருக்கு கொரோனா!

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்து வருகிறது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இந்நிலையில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், தனக்கு 2 நாட்கள் அறிகுறி இருந்ததாகவும், பரிசோதனையில் கொரோனா பாதித்துள்ளது தெரியவந்ததாகவும் கூறினார். மேலும் தான் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்துகொள்ளவும் கோரிக்கை விடுத்துள்ளார்....
பள்ளிகளில் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடக்கம்!

பள்ளிகளில் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா பாதிப்புகள் குறைய தொடங்கியதால் கடந்த ஆண்டில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முதலில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 50 சதவீத மாணவர்கள் என்ற சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு ஜனவரி 3-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவ தொடங்கியதால் பள்ளிகளுக்கு ஜனவரி 31-ந்தேதி வரை தொடர் விடுமுறை விடப்பட்டது. வகுப்புகள் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டன. இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக...