வியாழக்கிழமை, மே 16
Shadow

Tag: யுவன்ஷங்கர் ராஜா

சைலன்டாக  ‘சுல்தான்’ பட வேலைகளை முடித்த யுவன்!

சைலன்டாக ‘சுல்தான்’ பட வேலைகளை முடித்த யுவன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சைலன்டாக ‘சுல்தான்’ பட வேலைகளை முடித்த யுவன்! கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த டிரெய்லருக்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் பாடல்களுக்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ள நிலையில், டிரெய்லருக்கு மட்டும் யுவன் இசையமைத்திருந்தது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. சமீபத்திய தகவல் படி சுல்தான் படத்திற்கும், யுவன் தான் பின்னணி இசை அமைத்திருப்பதாக கூறப்படுகிறது. பிரம்மாண்ட பட்ஜெட் படம் என்...
மீண்டும் சிம்புவுடன் யுவன் இணைந்த மாநாடு

மீண்டும் சிம்புவுடன் யுவன் இணைந்த மாநாடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிம்புவுடன் யுவன் ஷங்கர் ராஜா இணைந்த மாநாடு... "மன்மதன், 'வானம்', 'வல்லவன்', 'சிலம்பாட்டம், 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' போன்ற சிம்பு படங்களுக்கு யுவன்ஷங்கர் ராஜா ஏற்கனவே இசையமைத்துள்ள நிலையில் தற்போது சிம்புவின் அடுத்த படத்திற்கும் அவர் இசையமைக்க யுவன் ஒப்பந்தமாகியுள்ளார். சிம்பு இப்போது ஹன்சிகாவுடன் மஹா படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்து அடுத்ததாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்க உள்ள மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக அமெரிக்கா சென்று உடலை ஸ்லிம் ஆக்கிக்கொண்டு வந்தார். இந்த படக்குழு வரும் 20ம் தேதி மலேசியா செல்கிறார்கள். இந்த நிலையில் மாநாடு படத்தின் இசைமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு, யுவன் இருவருமே தங்கள் வலைப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்கள்....