செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 15
Shadow

மீண்டும் சிம்புவுடன் யுவன் இணைந்த மாநாடு

 

சிம்புவுடன் யுவன் ஷங்கர் ராஜா இணைந்த மாநாடு…

“மன்மதன், ‘வானம்’, ‘வல்லவன்’, ‘சிலம்பாட்டம், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ போன்ற சிம்பு படங்களுக்கு யுவன்ஷங்கர் ராஜா ஏற்கனவே இசையமைத்துள்ள நிலையில் தற்போது சிம்புவின் அடுத்த படத்திற்கும் அவர் இசையமைக்க யுவன் ஒப்பந்தமாகியுள்ளார்.

சிம்பு இப்போது ஹன்சிகாவுடன் மஹா படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்து அடுத்ததாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்க உள்ள மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதற்காக அமெரிக்கா சென்று உடலை ஸ்லிம் ஆக்கிக்கொண்டு வந்தார்.
இந்த படக்குழு வரும் 20ம் தேதி மலேசியா செல்கிறார்கள்.

இந்த நிலையில் மாநாடு படத்தின் இசைமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு, யுவன் இருவருமே தங்கள் வலைப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன